Raagaa's Recipes: |
தேவையானவை:
பொரி - ஒரு கப்,
வேர்க்கடலை - கால் கப்,
பொட்டுக் கடலை - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 2,
பூண்டு - 6 பல்,
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,
கடுகு, எண்ணெய் - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் சிறிதளவு எண்ணெயைக் காயவிட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, தோலுடன் பூண்டை தட்டிப் போட்டவும்.
இதனுடன் மஞ்சள்தூள், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பொரி, உப்பு சேர்த்துப் புரட்டி இறக்கவும்.
மழைக்காலத்தில் மாலை நேர சிற்றுண்டியாக வீட்டில் உள்ளவர்களுக்கு இதைச் செய்து கொடுத்தால்... கண் சிமிட்டும் நேரத்தில் காலியாகிவிடும்.
No comments:
Post a Comment