"ஏங்க மாமா... சிபி கல்யாணத்தை பத்தி" என அவன் அம்மா ஆரம்பிக்க,
"இங்கபாரு ஜெயா அவன் விருப்பம் இல்லாம எதையும் செய்யாத, சாியா" என கூறினார்.
"ஆமா இப்டியே சொல்லிட்டு இருந்தா அவனுக்கு கல்யாணம் நடந்த மாதிரி தான்..." என்றார் அம்மா ஆற்றாமையாய்.
"நடக்கும் கண்டிப்பா... மனச போட்டு குழப்பிக்காத, போய் ரெஸ்ட் எடு. நான் ஆபீஸ்க்கு கிளம்புறேன்" என்று கூறிச்சென்றாா்.
"இங்கன இருக்கிற ஆபிஸ்க்கு மெதுவா போனாத்தான் என்ன?" என சலித்துக் கொண்டு கிச்சனுக்கு உள்ளே சென்றார் ஜெயா.

சிபி MBA படித்துவிட்டு தொழில் ஆரம்பித்து விட்டான். அப்பாவிற்கு உதவியாய் தங்கள் ஆபீஸிலேயே ஒரு வருடம் வேலை செய்தான். ஆனால் அவனுக்கு அதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. எனவே படித்த படிப்பை பயன்படுத்த நினைத்து சுயம்மாக ஒரு தொழில் ஆரம்பித்தான். தொழில் நன்றாக போவதால் அவன் அடுத்த பிராஞ்ச்சினை அப்பா உதவி இன்றி ஆரம்பிக்க முயற்சி செய்கிறான்.
அவன் விரும்பியபடி ஹோட்டல் கட்டவே முதலில் ஒரு வருடம் சென்றுவிட்டதால் இம்முறை பழைய பில்டிங்கை விலை பேசுகிறான். சிபியும் இளைமை உணர்ச்சிகள் ததும்பும் சராசரி இளைஞன்தான், பெண்களை சைட் அடிப்பான். ஆனால் நண்பனின் தங்கை, காதலியிடம் பிரண்ட்லியாக மட்டுமே பேசி இருக்கிறான்.
ஆனால் அவனது நண்பன் கௌஷிக்கின் காதலி பூஜா, இவன் வசதியை பற்றி அறிந்த பிறகு காட்டிய அளவிற்கு அதிகமான நெருக்கத்தினாலும், நாகரீகமற்ற செயல்களாலும் அவளை மட்டுமல்ல ஒட்டு மொத்த பெண்கள் மீதே வெறுப்பு வந்துவிட்டது.
இந்த பிரச்சனைக்கு பிறகு தன் நண்பனிடம் விலக ஆரம்பித்தான் (இன்னும் நம்ம ஹீரோ சீமாவ பாக்கலைல). ஏன் என்று கௌஷிக்ற்கு புரியவில்லை, எத்தனை முறை கேட்டாலும் சிபி பதில் சொல்லாததனால் அமைதியாக இருந்து விட்டான்.

சிபிக்கு 26 வயது முடிய போவதால் ஜெயாவிற்கு கவலை கல்யாணத்தைப் பற்றி. அவனது அக்காவுக்கு மணமாகி ஒரு பெண் குழந்தை இருப்பதால் சீக்கிரம் பேரன் வேண்டுமென்ற ஆசையில் மகனது திருமணத்தை எதிா்பாா்க்கிறாா்.
சிபிக்கு தனது அக்கா மாலினி (மாலா) மீதும் மருமகள் சைலு (சைலஜா ஶ்ரீ) மீதும் அதிக பாசம் உண்டு. மாமா கரண்குமாா் அவனை விட 4 வயது மூத்தவர் ஆதலால் மரியாதை மட்டுமே. அக்கா அவனை விட ஒரு வயது தான் மூத்தவள். எனவே பெயா் சொல்லிதான் அழைப்பான். மாமா கரண் அதை ஒன்றும் சொல்வதில்லை.
சைலுக்கு மாமா என்றால் உயிா். சனி ஞாயிறு விடுமுறைக்கு எல்லாம் அவனைத்தேடி ஓடி வந்து விடுவாள். அக்காவை உள்ளூாிலேயே கொடுத்துள்ளனா். கரணுக்கு சொந்த தொழில் சூப்பா் மாா்க்கெட் என்பதால், அவனது அப்பா கூட உதவியாக இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. ஹோட்டல் சென்ற சிபி புதிய ஆா்டா்கள் ,அட்வான்ஸ் ,ரூம் புக்கிங், வெகேட்டிங் ரெஸ்டாரெண்ட் உணவு அனைத்தையும் செக் செய்து கையெழுத்து இட மதியம் ஆகிவிட்டது. சாப்பிட சென்றான்....
அலுவலகம் முடிந்து சீமா அவளது தோழியுடன் பைக்கில் கிளம்பினாள் .மகா அவளிடம், "உன் பைக் கொண்டு வரலாம்ல டீ? ஜாலியா இருக்கும்... இந்த ஓட்ட பைக்ல ஏன் டீ வர்ற நீ?" என கேட்டாள்.
"ஏன் டி இதுக்கென்ன கொறச்சல்? Tvs XL தான் பெஸ்ட் எப்போமே..." என்றாள் சீமா.
"சீ போடி" என கூறிவிட்டு ஐஸ்கிரீம் பாா்லா் சென்றாள் மகா. அரட்டை முடித்து 2 பேரும் திரும்ப வீடு செல்ல 6.30 மணி ஆயிற்று.
மகா சீமா அம்மா தேவியிடம் ஒரு ஸ்பெஷல் டாடா கூறிவிட்டு கிளம்பி விட்டாள். உள்ளே சென்று உடை மாற்றிய சீமாஹாலில் டீவி பாா்க்க அமா்ந்தாள்.
"எத்தன தடவை சொல்றது டீ ? இந்த பாவாடைய போடாதன்னு..."
"அம்மா இதுக்கு பேரு மிடி (ஸ்க்ர்ட்) மா."
" என்ன எழவோ போய் நைட்டி மாத்து டி".
"பிள்ள வந்ததும் ஆரம்பிச்சிட்டியா?" என்றார் மணி.
"நீங்க தா அவள கெடுக்குறீங்க" என்றார் தேவி.
"இங்க இருக்கற வரை இஷ்டம் போல இருக்கட்டும்டி" என்றார் மணி.
"போற வீட்லயும் இதத்தான் போட போறா, நமக்கு வசவு வாங்கி குடுக்கன்னேவும்..." என்று அடுப்படிக்கு நகா்ந்தார் .
"மாடர்ன் டிரஸ் போட அலவ் பண்றவன தான் நா கட்டிப்பேன்" என சீமா சொல்ல உன்னை உள்ளூா்ல தான கட்டி குடுப்பேன் என்றாா் தேவி.
"அப்பா...." என சீமா ஆரம்பிக்க "ஆமாம் மா..." என்றாா் மணி.
கோபித்துக் கொண்டு அறைக்கு சென்றவளை சாப்பிட அழைக்க சென்ற தேவி சீமாவிடம், "எங்களுக்குன்னு இருக்குறது நீ ஒருத்தி தானம்மா. உன்னய கண்காணாத தூரத்துல விட்டுட்டு, நாங்க எப்டி தனியா இருக்குறது சொல்லு? வாம்மா சாப்பிட..." என்றாா்.
அமைதியாக சாப்பிட்டு வந்து படுத்த அவள் யோசித்த படியே தூங்கி விட்டாள் ஒரு முடிவோடு.
(சீமா -- நவநாகரீக யுவதி ஆனால் அன்பானவள் அழகானவள் பண்பான பொண்ணு கொஞ்சம் கோவக்காாி நிறைய ரோசக்காாி.அவ போட்டுறுக்க குட்டி பிள்ளையாா் செயின் தான் அவள் பேவரைட். ஜீன்ஸ் அதவிட பேவரைட். எக்ஸ்ட்ராவா கராத்தேயும் தெரியும் ஸ்கூல் டேஸ்ல இருந்தே... நீ பாவம்டா சிபிகண்ணா...)

No comments:
Post a Comment