This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Saturday, 13 October 2018

புது பயம்

தென்கச்சி கோ. சுவாமிநாதன் கதைகள்

“ஏன் ஒரு மாதிரியா பயந்துகிட்டே வர்றீங்க?”


“எந்தக் காரணமும் இல்லே சார்... இருந்தாலும் எனக்கு பயமா இருக்கு!”


“என்ன இது அர்த்தமில்லாத பயம்....?”


“அப்படித்தாங்க எனக்கும் தோணுது....இருந்தாலும் பயமா இருக்கு!”


”இது ஒர் உளவியல் கோளாறுன்னு நினைக்கிறேன்...!”


“அப்படியா சொல்றீங்க...?”


“ஆமாம்! Panic attack ன்னு கேள்விப்பட்டிருக்கீங்களா?”


“இல்லையே...!”


“அது உளவியல் சம்பந்தமான ஒரு நோய்...! நம்ப முடியாத, கண்மூடித்தனமான ஒரு பய உணர்வு இந்த நோயை உண்டாக்கும்.... இந்த நோயை வெறும் வார்த்தைகளாலே விவரிக்க முடியாதுங்கறாங்க அமெரிக்க டாக்டர்கள்!”


“அந்த அளவுக்கு மோசமா...?”


”30 வயதை எட்டிப் பிடிக்கிறவுங்களுக்கு.... அதுவும் பெண்களுக்கு இந்தப் பயம் வர்றது உண்டாம்... இது மாதிரி தொடாந்து வந்தா அது Phobia நோயா மாறலாமாம். இந்த நோய் தாக்கும் நிமிடங்கள் குறைவுதான்... இருந்தாலும் அந்த கொஞ்ச நேரத்துலே அது ஏற்படுத்தற விளைவு மறக்க முடியாத அனுபவம்... இதயம் அதிகமாய்த் துடிக்கும்... பயத்துனாலே வியர்வை வேகமா வெளியேறும்... தலை வேகமாச் சூழல்றது மாதிரித் தோணும்!”


“இதுக்கு என்ன காரணம்?”


“ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான காரணம் இருக்கும்... அதைக் கண்டுபிடுச்சி சரிசெய்யணும்! வாழ்க்கையிலே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தணும்!”


“எங்க வீட்டுலே அடிக்கடி அம்மாவுக்கும் – சம்சாரத்துக்கும் கடுமையான சண்டை நடக்கறது வழக்கம்... அந்த நினைப்புக்கூட என்னுடைய பயத்துக்குக் காரணமா இருக்கலாம்!”


“எங்க வீட்டுலே கூட அப்படி நடக்கறது உண்டு... அந்தச் சமயத்துலே நான் சும்மா அவங்களைப் பார்த்துக்கிட்டு நிக்கமாட்டேன்!”


“வெறெ என்ன செய்வீங்க?” 


“அவங்களை உற்சாகப்படுத்திக் கிட்டே இருப்பேன்.” 


            

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.