This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Thursday 25 October 2018

யார் கடவுள்?

தென்கச்சி கோ சுவாமிநாதன் கதைகள்:


ஆத்துக்கு நடுவுல ஒரு கோயில் மண்டபம்... அங்க கடவுள் நம்பிக்கை அதிகமுள்ள ஒருத்தன் வேலை செய்துகிட்டு இருந்தான். திடீர் னு ஆத்துல வெள்ளம் கிடுகிடுனு ஏறிப் போச்சி.... அவனுக்கு என்ன பண்ரதுன்னே தெரியல.


கரையில இருந்த ஒருத்தன் கயிறு தூக்கி போட்டு" இதப் புடிச்சிக்கிட்டு வாடா" னு கத்தினான். அதுக்கு அவன்  நான் நம்புற கடவுள் என்னைக் காப்பாற்றுவார் நீ போடா னு சொல்லிட்டான்.


ஆத்துல வெள்ளம் இன்னும் அதிகமாயிட்டே இருந்தது... ரெண்டாவதா ஒருத்தன் படகுல வந்து "டேய் இந்தப் படகுல தாவி ஏறிக்க உன்ன கரையில சேரத்துடுறேன்னு" சொன்னான். இப்பவும் அவன் "கடவுள் என்னைக் காப்பாற்றுவார்" னு சொல்ல அவனும் போயிட்டான்.


ஆத்துல வெள்ளம் இன்னும் அதிகமாக கோயில் கூரை மேல ஏறிக்கிட்டான்.


இப்போ மேல இருந்து ஒரு ஹெலிகாஃப்டர் வந்து ஏணிய போட்டு மேல ஏறி வான்னு சொல்ல.... இப்பவும் அவன் "கடவுள் என்னைக் காப்பாற்றுவார்"னு சொல்லிட்டான்.... ஹெலிகாஃப்டரும் போயிட்டுது. அவனும் செத்து கடவுள பார்க்கப் போயிட்டான்.


அங்க போயி கடவுள் கிட்ட சண்டை போட்டான் "உன்ன கடைசி வரைக்கும் நம்புனேனே இப்படி என்னை கை விட்டுட்டியே"னு கேட்டான்.


அதற்குக் கடவுள் சொன்னார்....


"அட முட்டாப் பயலே... நான் எங்கடா உன்னக் கை விட்டேன்... முதல் தடவை கயிறு போட்டான் பாரு அது நான் தான்... 

அடுத்ததா படகுல வந்து ஏறிக்க சொன்னான் பாரு அதுவும் நான் தான்.... 

அடுத்து ஹெலிகாஃப்டர்ல வந்து உன்ன கூப்பிட்டேன் பாரு... அதுவும் நான் தான்..


இப்படி மூணு தடவை உன்னக் காப்பாத்த 

முயற்சி பண்ணேன்... ஆனா நீ தான் புரிஞ்சிக்காம என்னை கை விட்டுட்டே னு சொன்னாரு.


மனிதர்களுக்கு உதவி செய்ய கடவுள் மனித உருவில் தான் வருவார் .


மனிதநேயம் தான் கடவுள்....

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.