1990களில் இந்திய தொலைத்தொடர்புத் துறை பொறியாளர் ஒருவர் ஊர் ஊராக சென்று தரைவழி கேபிள்களை பதிப்பதற்கான பணியை மேற்கொண்டு வந்தபோது அப்பொறியாளருக்கு பெரும் சவாலாக இருந்தது என்னவென்றால் போகும் இடமெல்லாம் கேபிள் போடுவதற்கு மண்ணை தோண்டி தருவதற்காக ஒரு வேலையாள் நிரந்தரமாக வேண்டுமென்பதே.
அதனால் அப்பொறியாளர் ஒரு முடிவுக்கு வந்தார். வேலைக்கு ஆள்தேவை என்று விளம்பர போர்டு வைப்பது. இதுபற்றி அவர் தனது நண்பனிடம் தெரிவித்தவுடன் அவர் நண்பன், கவலைபடாதே அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றாராம்.
அதை நம்பி அப்பொறியாளரும் இரவு தூங்குவதற்கு சென்றுவிட்டார். மறுநாள் பொறியாளர் கடைத்தெருவிற்கு சென்றபோது அனைவரும் அவரை பார்த்து கிசுகிசுத்தவாறே சிரித்துள்ளனர்.
இதை கவனித்த பொறியாளர் பிறகு தனது நண்பன் வைத்த விளம்பர போர்டை பார்த்துதான் மக்களின் சிரிப்பிற்கான காரணத்தை தெரிந்துகொண்டாராம்...
அப்படி என்னதான் அந்த விளம்பர போர்டில் இருந்தது என்கிறீர்களா...???
"கூடவே இருந்து குழிதோண்ட ஆள்தேவை - இப்படிக்கு தொலைத்தொடர்பு அதிகாரி"
No comments:
Post a Comment