தென்கச்சி கோ சுவாமிநாதன் கதைகள்:
குழந்தைகள் விஷயத்திலே ரொம்பவும் எச்சரிக்கையா இருக்கணும்.
பெரியவங்க பலபேருக்கு இது சரியா தெரியறதில்லே! பெத்தவங்க சரியா இல்லேன்னா குழந்தைகளுக்கு பலவிதமான மனோதத்துவ நோய்கள் வந்துடுதுன்னு நிபுணர்கள்லாம் சொல்றாங்க.
குழந்தைகள்கிட்டே அன்பை காட்டுங்க … வேணாம்ணு சொல்லல்லே! அது மென்மையா இருக்கட்டும். முரட்டுதனமா இருக்க வேண்டாம். ‘என் கண்ணே!’ ன்னு சொல்லிக்கிட்டு பல்லை ‘நறநற’ன்னு கடிச்சிட்டுத்துதான் சில பேர் குழந்தைகிட்டே போவாங்க! அவ்வளவு அழுத்தமான அன்பு.
முரட்டுத்தனமான அன்பை குழந்தைகள் கிட்டே திணிக்கும்போது அதோட உடம்பும் கெட்டு போவுது, மனசும் கெட்டு போவுது.
ஒரு பன்னிரெண்டு வயசு பெண் குழந்தை… அவளுக்கு அடிக்கடிமயக்கம்-வாந்தி. பல டாக்டர்கள் கிட்டே பரிசோதனை பண்ணினாங்க. மருந்தெல்லாம் குடுத்துப் பாத்தாங்க.
எந்த பிரயோஜனமும் இல்லை. போகப் போக அந்தப் பொண்ணுக்கு மனநிலை சரியில்லாமலே போயி கன்னா பின்னான்னு ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமில்லாமலே பேச ஆரம்பிச்சிடுச்சி. இதுக்கு காரணம் என்னங்கறதை ரொம்ப நாளைக்கு அப்புறம்தான் கண்டுபிடிக்க முடிஞ்சிது.
அந்த பெண்ணோட அப்பா அம்மா அடிக்கடி சண்டை போட்டுக்குவாங்களாம். அதை பாக்கறப்போதல்லாம் இந்த குழந்தைக்கு வாந்தி வந்துடும் மயக்கம் வந்துடும். கன்னா பின்னான்னு பேச ஆரம்பிச்சிடும், ரெண்டு மூணு நாளைக்கு இப்படி இருக்கும். அப்புறம் சரியா போயிடும்.
பெற்றோர்கள் சண்டை போடும்போது பாதுகாப்பில்லாத உணர்வு, பயம் இதுலாம் மனசுலே தங்கிக்குது. அப்பா அம்மா கிட்டே நெருக்கம் குறையுது. அன்பு குறையுது. வெறுப்பு உண்டாவுது.. மனநோய் உடல் நோய் ரெண்டும் வந்துடுது.
ஒரு அப்பா - மார்க் லிஸ்ட்டை கையிலே வச்சிக்கிட்டு மகனைத் திட்டினார்.
“கணக்குலே நூத்துக்கு 20 மார்க் வாங்கியிருக்கியே உனக்கு வெக்கமா இல்லே?” ன்னார்.
’இல்லே’ன்னான் பையன். “ஏன்”னு கேட்டார்
“இப்ப நீங்க கையில வச்சிருகிறது என்னோட மார்க் லிஸ்ட் இல்லே. இது உங்களோடது அம்மாதான் அதை பத்திரப்படுத்தி வச்சிருந்தாங்க. அதைதான் எடுத்துகிட்டு வந்து குடுத்தேன்” அப்படின்னான் பையன்.
No comments:
Post a Comment