This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Saturday 27 October 2018

மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


எதை நான் கேட்பின்

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்

மலர்கள் கேட்டேன்


எதை நான் கேட்பின்

உனையே தருவாய்


மலர்கள் கேட்டேன்

தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


காட்டில் தொலைந்தேன்

வழியாய் வந்தனை


இருளில் தொலைந்தேன்

ஒளியாய் வந்தனை


காட்டில் தொலைந்தேன்

வழியாய் வந்தனை


இருளில் தொலைந்தேன்

ஒளியாய் வந்தனை


எதனில் தொலைந்தால்


எதனில் தொலைந்தால்

நீயே வருவாய்


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


பள்ளம் வீழ்ந்தேன்

சிகரம் சேர்தனை


வெள்ளம் வீழ்ந்தேன்

கரையில் சேர்ந்தனை


பள்ளம் வீழ்ந்தேன்

சிகரம் சேர்ந்தனை


வெள்ளம் வீழ்ந்தேன்

கரையில் சேர்ந்தனை


எதனில் வீழ்ந்தால்


எதனில் வீழ்ந்தால்

உன்னிடம் சேர்ப்பாய்


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


எதை நான் கேட்பின் ஆ ஆ ஆ

எதை நான் கேட்பின்

உனையே தருவாய்

உனையே தருவாய்


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை


மலர்கள் கேட்டேன்

வனமே தந்தனை


தண்ணீர் கேட்டேன்

அமிர்தம் தந்தனை

பற்றுதல்

தென்கச்சி கோ சுவாமிநாதன் கதைகள்:

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள். ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது? இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது. அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்படவில்லை. அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர் என்று ஆற்றில் குதித்தான். அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.


காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்துவிட்டது.


அடுத்தவன் பார்த்தான்.


நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா என்று எதிர்பார்த்தான்.


இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது. இதுதான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான். இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது. ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்... வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது. விளைவு _ இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.


அவர்கள் போக வேண்டிய திசை வேறு.


போய்க் கொண்டிருக்கிற திசை வேறு.

கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது. சிலர் கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.


ஆன்மிகம் என்ன சொல்கிறது தெரியுமா? நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா? அப்படியானால் எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள். ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!


ஆற்றின் நடுவே கம்பளி மூட்டை ஒன்று மிதந்து செல்கிறது. உள்ளே ஏதாவது பொருள் இருக்கும் என்கிற ஆசையில் ஒருத்தன் நீந்திச் சென்று அதைப் பற்றுகிறான். நீண்ட நேரம் ஆகியும் கரை திரும்பவில்லை. நடு ஆற்றில் போராடிக் கொண்டிருக்கிறான். கரையில் நின்று கொண்டிருக்கிற நண்பர்கள் கத்துகிறார்கள்...


‘‘நண்பா... கம்பளி மூட்டையை இழுத்துக் கொண்டு உன்னால் வர முடியவில்லை என்றால் பரவாயில்லை... அதை விட்டுவிடு!’’


ஆற்றின் நடுவே இருந்து அவன் அலறுகிறான்: ‘‘நான் இதை எப்பவோ விட்டுட்டேன்... இப்ப இதுதான் என்னை விடமாட்டேங்குது. ஏன்னா, இது கம்பளி மூட்டை இல்லே. கரடிக் குட்டி!’’


ஸ்ரீரங்கத்து வெள்ளையம்மாள் கதை

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஸ்ரீரங்கத்து வெள்ளையம்மாள் பற்றிய செவி வழி கதை:


ஸ்ரீரங்கம் முழுவதும் சோகம் சூழ்ந்து கிடந்தது. இப்படி ஒரு நிலைமை வரும் என்று யாருமே நினைத்துக்கூட பார்த்தது இல்லை. ஆம், அரங்கன் குடியிருக்கும் கோயிலுக்குள் அத்துமீறிப் புகுந்துவிட்ட முகமதியப் படைகள் பொன், வைர ஆபரணங்களைக் கொள்ளையடித்து விட்டனர். இன்னும் மதிப்புமிக்க 

பொக்கிஷங்களைத் தேடி அங்கேயே டேரா போட்டு இருக்கிறார்கள். நடந்துவிட்ட திடீர் விபரீதங்களை எண்ணிக் கண்ணீர் வடித்தனர் ஸ்ரீரங்கத்து மக்கள். முகமதியப் படைகளை எதிர்த்த யாரும் உயிருடன் திரும்பவில்லை.


அரங்கனுக்காக கண்ணீர் வடித்த மக்களுக்கு அதைவிட அதிர்ச்சியாக இருந்தது, அரங்கன் கோயில் தேவதாசியான வெள்ளையம்மாள் எடுத்த முடிவு.  கோயில் கொள்ளைக்குத் தலைமை தாங்கி வந்த முகமதியப் படைத் தளபதிக்கு ஆசை நாயகியாக இருக்கச் சம்மதித்து விட்டாள் வெள்ளையம்மாள் என்பதுதான் அது.


'இப்படியொரு முடிவெடுக்க இவளுக்கு எப்படி மனசு வந்தது? அரங்கன் புகழ் பாடியவள் எப்படி மனித அரக்கனிடம் மயங்கிப் போனாள்?’ என்று கோபம் அடைந்தனர். அவளை மயக்கியது பொன்னா... வீரமா... புகழா? என்று புரியாமல் சஞ்சலப்பட்டனர். அவளது சுயரூபத்தை மற்றவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இறைவன் நடத்திய விளையாட்டுதான் இந்தக் கொள்ளை நாடகம் என்று மக்கள் தங்களைத் தாங்களே தேற்றிக்கொண்டனர்.


நடுநிசியைத் தாண்டிய நேரம். வெள்ளையம்மாள் தளபதியை சந்திக்க ஆசைப்பட்டாள். வழக்கத்தை விட தன்னைக் கூடுதலாக அலங்கரித்துக் கொண்டாள். உடன் கிளம்பிய தோழியை இருக்கச் சொல்லிவிட்டு, இருட்டில் தனியாகச் சென்றாள். எப்போதும் அவளது வருகையை முன்னறிவிப்பு செய்யும் கொலுசு, அன்று மௌன கீதம் இசைத்தது. ஆம்... இரவு நேரத்தில் படைத் தளபதியை சந்திக்கப் போவது யாருக்கும் தெரியக்கூடாது என்று, முத்துக்கள் கொஞ்சும் கொலுசுகளைக் கழற்றி விட்டாள்.


ஸ்ரீரங்கம் முழுவதும் முகமதியர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால், வீதிகளில் உள்ளூர் மக்களின் நடமாட்டம் சுத்தமாக இல்லை. முகமதியப் படை வீரர்கள் மட்டும் ஆங்காங்கே காவல் பணியில் இருந்தனர். இருந்தார்கள் என்று சொல்வதை விட தூங்கி வழிந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். எதிர்ப்பு இல்லாமல் கோயிலைப் பிடித்த சந்தோஷத்தில் அதிகமாக மதுஅருந்தி மயங்கிக் கிடந்தனர். அதனால், பலரையும் எளிதில் தாண்டிப் போனாள் வெள்ளையம்மாள்.


ஸ்ரீரங்கம் கோயில் மண்டபப் பகுதியில் கூடாரம் அமைத்துத் தூங்கிக் கொண்டிருந்த தளபதியின் குடிலுக்குள் நுழைந்தாள். அந்த நேரத்திலும் சுதாரித்துக்கொண்டு விசுக்கென எழுந்தான்.


''யாரது...'' என்றபடி தீப்பந்தத்தை உயர்த்தினான்.


'வணக்கம் தளபதியாரே!' எழிலாகக் கும்பிட்டாள் வெள்ளையம்மாள்.


''ஓ... நீயா? இங்கே ஏன் வந்தாய்? தகவல் அனுப்பி இருந்தால் நானே உன் இல்லம் வந்திருப்பேனே..?' என்று அவளைத் தொட வந்தான்.


''அரசே இது அரங்கனின் வீடு. இங்கே என்னை நீங்கள் தொடக்கூடாது. என் இல்லம் வாருங்கள். ஆசை தீர இன்பம் பெறலாம். ஆனால், அதைவிட ஒரு முக்கியமான சங்கதி கேள்விப்பட்டேன். அதைச் சொல்லத்தான் ஓடோடி வந்தேன்'' என்றாள்.


''அப்படி என்ன செய்தி?''


''இங்கே நீங்கள் எதற்காக படையெடுத்து வந்தீர்கள்?'


'எதிரிகளை வெற்றிகொண்டு, செல்வங்களையும் அள்ளிச் செல்ல வேண்டும் என்பதுதான் எங்கள் படையெடுப்பின் ஒரே நோக்கம்'


'வெற்றி அடைந்து விட்டீர்கள். செல்வங்களை எடுத்துக் கொண்டீர்கள். ஆனாலும் ஏன் இங்கே இருக்கிறீர்கள்?''


''விலை மதிக்க முடியாத செல்வங்களைப் புதையலாக ரகசிய இடத்தில் வைத்திருப்பதாகக் கேள்விப்பட்டோம். அதை எடுக்கத்தான் காத்திருக்கிறோம்''


''நானும் அதற்காகவே வந்தேன்...''


''என்ன... உனக்கு அந்த ரகசியம் தெரியுமா?''


''மெள்ளப் பேசுங்கள். ஐம்பொன் சிலைகளும் வைர மாலைகளும், முத்து மணிகளும் பாதுகாப்பாக எங்கே இருக்கின்றன என்பது எனக்குத் தெரியும்?''


''எங்கே என்று சொல். உன்னை என் நாட்டுக்கு அழைத்துச் சென்று பொன்னாலேயே அலங்கரிக்கிறேன்'' தளபதியின் முகத்தில் ஆர்வம் மின்னியது.


''அதை சொல்லத்தானே வந்திருக்கிறேன். ஆனால், ஒரு நிபந்தனை. அதை நிறைவேற்றுவதாக நீங்கள் சத்தியம் செய்துகொடுத்தால் அந்த இடத்தைக் காட்டுவேன்'' என்று செல்லம் கொஞ்சினாள்.


''சொல் வெள்ளையம்மா. புதையலுக்காக உனக்கு என்ன வேண்டும்?''


''எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால், அந்தப் புதையலை நான் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதனால், நீங்களும் நானும் மட்டும் முதலில் சென்று பார்ப்போம். அதன்பிறகுதான், நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும்'' என்றாள்.


''ப்பூ... இவ்வளவுதானா? பெண்புத்தி என்பது சரியாகத்தான் இருக்கிறது. சரி வா... நீயும் நானும் மட்டும் போய்ப் பார்ப்போம். ஆசைப்பட்ட அத்தனையையும் நீயே எடுத்துக்கொள். மீதி இருப்பதை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்'' என்று சந்தோஷமாக சிரித்தான்.


''சரி, வாருங்கள். உங்கள் ஆட்கள் யாருக்கும் தெரியாதபடி மறைந்து வாருங்கள்'' என்று அழைத்துச் சென்றாள். ஸ்ரீரங்கம் கோயிலின் கிழக்கு கோபுரம் அருகே வந்து நின்றாள் வெள்ளையம்மாள்.


'இங்கேதான் இருக்கிறது. ஆனால் மேலே போகவேண்டும்'' என்று அண்ணாந்து பார்த்தாள்.


''வா... போகலாம்...''


''வெளவால், புறாக்கள் இருக்குமே...''


''அட, இதற்கா பயப்படுகிறாய். பயம் வந்தால் என்னைக் கட்டிக்கொள். வா... சீக்கிரம் வா... உடனே புதையலைப் பார்க்க வேண்டும்'' என்று அவசரப்பட்டான்.


சில நிமிடங்களில் இருவரும் கோபுரத்தின் உச்சியை அடைந்தனர். இரவின் நிசப்தத்தை கலைத்துக்கொண்டு சலசலத்தபடி தூரத்தில் ஓடிய காவிரி ஆற்றின் இரைச்சல் கேட்டது. குளிர்ந்தக் காற்று கொஞ்சம் நடுக்கம் கொள்ளச்செய்தது. கோபுரத்தின் உச்சியில் இருந்தபடி, இரவு நேர ஸ்ரீரங்கத்து அழகை ரசித்துப் பார்த்த தளபதி, வெள்ளையம்மாளிடம் உற்சாகமாகப் பேசினான்.


'ஆஹா... அற்புத தரிசனம். வெள்ளையம்மா, இந்தக் கோபுரத்தின் உச்சியில் இப்போதுதான் முதன் முறையாக ஏறி இருக்கிறேன். இந்த இடத்தில் இருந்து உங்கள் ஊரை ரசிப்பதற்கு இரண்டு கண்கள் போதாது. அத்தனை அழகாக மின்னுகிறது, ஆமாம் எங்கே இருக்கிறது பொக்கிஷங்கள்?''


'அதோ... அங்கே பாருங்கள்...' என்று கை நீட்டினாள்.


ஸ்ரீரங்கநாதர் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தைத்தான் காட்டினாள். அவனும் ஆர்வமாய் பார்த்தான்.


''கீழேதான் பொக்கிஷம் இருக்கிறதா... பிறகு ஏன் மேலே அழைத்து வந்தாய்?'' என்று சொல்லி வாய் மூடுவதற்குள் அந்த சம்பவம் நடந்து விட்டது.


சிணுங்கலும் சிருங்காரமுமாக பேசிக்கொண்டிருந்த வெள்ளையம்மாள், திடீரென்று புயலாய் மாறினாள். கோபுரத்தின் உச்சியில் இருந்து தளபதியை கீழே தள்ளி விட்டாள். தளபதி எழுப்பிய அபயக் குரல் கேட்டு முகமதியப் படையினர் கிழக்குக் கோபுரம் பகுதிக்கு ஓடி வந்தனர். அங்கே, தங்களது படைத்தளபதி இறந்துக் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கோபுரத்தின் உச்சியைப் பார்த்தனர். அங்கே, வெள்ளையம்மாள் வெற்றி தேவதையைப் போன்ற பெருமிதத்துடன் நின்று கொண்டிருந்தாள். அவளைப் பிடிக்க வீரர்கள் சிலர் கோபுரத்தின் மீது வேகமாக ஏறினர். அதைக் கண்டு கொஞ்சமும் அச்சம் அடையவில்லை வெள்ளையம்மாள்.


ஸ்ரீரங்கநாதர் புகழை வாய்விட்டு பாடியபடி... குவிந்த கரத்துடன்... நினைத்ததை சாதித்த திருப்தியுடன் கோபுரத்தின் மேலே இருந்து கீழே குதித்தாள்.  அவளுடைய உயிர் பிரிந்தது.


தகவல் கேள்விப்பட்டு ஸ்ரீரங்கத்து மக்கள் ஓடோடி வந்தனர். வெள்ளையம்மாளின் பக்தியைக் குறைவாக  மதிப்பிட்டதை எண்ணி தங்களைத் தாங்களே நொந்து கொண்டனர். ஒரு பெண்ணுக்கு இருக்கும் துணிச்சல் தங்களுக்கு இல்லாமல் போனதே என்று ஆண்கள் வீரம் வரப்பெற்றனர். தலைவன் இல்லாத படையை சிதறடித்தனர். கொள்ளை அடித்து வைத்திருந்த நகைகள், பொன், பொருட்களை அப்படியே விட்டு, உயிர் பிழைத்த வீரர்கள் தப்பி ஓடினர்.


ஸ்ரீரங்கநாதரின் செல்வத்தைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரைக் கொடுத்த வெள்ளையம்மாளின் நினைவாகத்தான், அந்தக் கோபுரம் இன்னமும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது. வெள்ளையம்மாளின் தியாக வரலாறு செவிவழிக் கதையாகவே பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், அவள் குதித்து உயிர்விட்ட கிழக்கு கோபுரம்தான் இப்போது, 'வெள்ளைக் கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது.


வெள்ளையம்மாளின் உயிர்த்தியாகம் குறித்துப் பேசுகிறார் மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் நண்பரும், வைஷ்ணவப் பெரியவருமான ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரி.


'வெள்ளைக் கோபுரத்தில் இருந்து குதித்து உயிருக்குப் போராடிய வெள்ளை யம்மாள், தனது உயிர் பிரியும் தறுவாயில், 'இனிவரும் காலங்களில் என்னைப் போன்ற தேவதாசிகளில் யாரேனும் மரணம் அடையும்போது, கோயில் திருமடப் பள்ளியில் இருந்து நெருப்பும், திருக்கொட்டாரத்தில் இருந்து அரிசி, தீர்த்தம், மலர் மாலை, திருப்பரிவட்டம் ஆகியவற்றைக் கொடுத்தனுப்ப வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அந்த வழக்கம் வெகுகாலத்துக்கு நடைமுறையில் இருந்தது. 1953-ல் தாசிகள் ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்த பிறகுதான் இந்த வழக்கம் நின்று போயிற்று.


சாஸ்திரங்கள் சில

நம் முன்னோர்களால் வகுத்து தரப்பெற்ற சாஸ்திரங்கள் சில:


1. மகாலட்சுமி அமர்ந்த நிலையில் உள்ளபடம். விக்கிரகம் ஆகியவற்றையே வீட்டில் வைக்க வேண்டும்.


.2. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவதுதான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.


3. திருக்கோவிலின் பிரதான வாசல் வழியேதான் கோயிலுக்குள் செல்ல வேண்டும்.


4. அர்ச்சனைப் பொருட்களை இடது கையால்எடுத்துச் செல்லக் கூடாது.


5. கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் சிறிது நேரம் கழித்துக் கை,கால்கள் கழுவலாம். ஆனால் குளிக்கக் கூடாது.


6. எலுமிச்சம் பழத் தீபம் விளக்கைக் கோயிலில் மட்டுமே ஏற்ற வேண்டும். வீடுகளில் ஏற்றக் கூடாது.


7. சுவாமிக்கு எடுக்கும் ஆரத்தியில் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. 

மனிதர்களுக்கு எடுக்கும் போது சுண்ணாம்பு சேர்க்கலாம்.


8. சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது


9. இறைவன் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.


10. நல்ல காரியங்கள் பற்றிப் பேசும் போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது. பேசினால் சுபம் தடைபடும்.


11. திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோவில் ஸ்தலத்திற்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.


12. ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச்செல்லும் பொழுது அதைக் கழற்றி வைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.


13. கோயில் மூடியிருக்கும் போதும், திருமஞ்சன பூஜையின் போதும், திரையிட்டிருக்கும் போதும் வழிபடக்கூடாது.


14. குங்குமத்தை வலது கை மோதிர விரலில் இட்டுக் கொள்வதே நல்லது


15. விக்கிரகத்திற்கு தீபாராதனை நடக்கும்போது கண்களை மூடிக்கொண்டு வணங்கக்கூடாது.


16. பெண்கள் மாதவிலக்கின்போது எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக் கூடாது.


17. செவ்வாய் கிழமை, புதன் கிழமை பகல்,வெள்ளிக்கிழமை குத்து விளக்கைத் துலக்கக் கூடாது.


18. இறந்த முன்னோர்களின் படங்களை (அவர்கள் தெய்வமாகி விட்டிருந்தாலும்) சாமி படங்களுடன் வைத்து வணங்குதல்கூடாது. தனியாக வீட்டில் வேறொரு இடத்தில் வைத்து வணங்கலாம.


19. வாழைப்பழம் சாப்பிட்டபின் மோர் சாப்பிடக் கூடாது.


20. பூஜை அறையில் தெய்வங்களை வடக்குப் பார்த்து வைக்கக் கூடாது.


21. புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது. பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.


22. கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர்கணவரோ சிதறு தேங்காய் உடைக்கக்கூடாது. சில தகவல் நூல்களிலும் சில தகவல் நன்றாக வாழ்ந்தும் , வாழும் தம்பதியர்கள் அனுபவம் அடைந்து சொன்னது ...  

                                                                                23 இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும். ஆகவே,மரணம் ஏற்பட்ட ஒரு வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி அடிக்கடி பறந்து வந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் அந்த ஆன்மாக்களின் ஆசியால் சந்தோஷம்,சுபகாரிய நிகழ்வும்,தீர்க்காயுளும் உண்டாகும்.


24 சிங்கம்,புலி,கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை உங்களுடைய வீடுகளில் வைப்பதின் மூலம் எதிரிகளின் தொல்லை அடங்கும்.


25  தன்னைப்பற்றி பிறரிடம் சொல்வதன் மூலம் குறைந்து விடும் விஷயங்கள் இரண்டு. அவை பாவமும் புண்ணியமும்.

நாம் செய்யும் பாவங்களை நாமே பிறரிடம் கூறும் போது அதுவும் குறைந்து கொண்டே வரும்.


26  முறைப்படி மந்திரங்கள் ஓதி பிறர் மீது ஏவப்பட்ட செய்வினைக்கு 1008 நாட்கள் மட்டுமே சக்தி உண்டு.அதன் பிறகு அது செய்தவனையே திருப்பித்தாக்கும்.  தான் செய்த வினையை தாமே அனுபவிப்பார்.


27  உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தால் கண்ணூறு தாக்கி இருப்பதாக உறுதி செய்து,உங்கள் வீடு முழுக்க உப்பு கலந்த நீரால் கழுவி விட்டால் கண்ணூரு போய்விடும்.


28  அடுக்கு அரளி,செம்பருத்தி பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் ஞானம் பெருகும்.தொழில் விருத்தியடையும்.


29  ஒரு பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து அவள் குழந்தை பெற்ற முப்பதாவது நாள் வரை அவளது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுதல் கூடாது.


30  அன்னாச்சிப்பழம் ஓவியத்தை உங்கள் வீட்டில் சுவற்றிலோ அல்லது தொழிலகங்களின் முன்புற அறைகளிலோ வரைந்து வைத்தால் அதிர்ஷ்டம் தேடிவரும்...

கிருஷ்ணா... புடவை கொடு!

பரமார்த்த குரு கதைகள்:

பரமார்த்த குருவும் சீடர்களும் பொரி வாங்கிச் சாப்பிட்டபடி மடத்துக்குத் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது, பக்கத்துத் தெருவில் தெருக்கூத்து ஒன்று நடக்க இருந்தது. அதில் நடிப்பதற்காக, கிருஷ்ணர் வேடம் போட்டுக் கொண்டு அந்த வழியாக வந்தார் ஒருவர்.


அவரைப் பார்த்த சீடர்கள், நிஜமான கிருஷ்ணர் தான் வருகிறார் என்று நம்பினார்கள்.


“அதோ பாருங்கள் குருதேவா! கிருஷ்ண பரமாத்மான வருகிறார்!” என்று குதித்தான் மட்டி.


“ஆமாம் குருவே! கையில் புல்லாங்குழல் கூட வைத்திருக்கிறார்!” என்றான் மடையன்.


பரமார்த்தரும் அவரைக் கடவுள் என்றே நம்பினார்! உடனே நன்றாக இருந்த தன் வேஷ்டியைக் கிழித்து விட்டுக் கொண்டார்!


“சீடர்களே, நீங்களும் உங்கள் துணிகளை இதே போல் கிழித்துக் கொள்ளுங்கள்” என்றார் பரமார்த்தர்.


“புதுத் துணிகளைக் கிழிப்பதா?” ஏன் குருவே?” என்று கேட்டான், முடூடாள்.


“புத்தி கெட்டவனே! ஏன் என்று கேட்காதே. சீக்கிரம் கிழி! அப்போதுதான் நாம் ஏழைகள் என்று அவர் நம்புவார்!” என ஆணையிட்டார் பரமார்த்த குரு.


சீடர்கள் ஐவரும், குருவின் கட்டளைப்படி கட்டியிருந்த வேட்டிகளைக் கிழித்துக் கந்தல் கந்தலாக ஆக்கினார்கள்!


உடனே பரமார்த்தர் வேகமாகச் சென்று, கிருஷ்ணர் வேடம் போட்டவர் காலில் விழுந்து வணங்கினார்!


“பாஞ்சாலிக்குப் புடவை கொடுத்து மானம் காத்த கிருஷ்ணா! அதே போல் நீதான் எங்களுக்கும் ஆளுக்கு ஒரு புடவை கொடுத்து எங்கள் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்!” என்று வேண்டினார் பரமார்த்தர்.


“குருவே! நமக்கு எதற்குப் புடவை?” என்று கேட்டான் மண்டு.


“அதானே?” நமக்கு வேட்டி அல்லவா தேவை!” என்றான் மூடன்.


“கார்மேகக் கண்ணா!” இந்தா, பொரி! உன் இஷ்டம் போல் கொரி!” என்றபடி கொஞ்சம் பொரியைத் தந்தான், மட்டி.


கிருஷ்ணர் வேடம் போட்டவருக்கோ ஒன்றும் புரியவில்லை. “நான் கடவுள் இல்லை! எனக்கு நேரமாகிறது; என்னைப் போகவிடுங்கள்” என்றார்.


“கண்ண பெருமானே! எங்களை ஏமாற்ற நினைக்காதிர்கள்” எனக் கெஞ்சினான், முட்டாள்.


“கண்ணா! அன்று குசேலர் கொடுத்த அவலை மட்டும் சாப்பிட்ட நீ, இந்த ஏழைப் பரமார்த்தர் தரும் பொரியைச் சாப்பிடத் தயங்குவது ஏன்?” என்றார் குரு.


“கோபாலா கோவிந்தா! தயவு செய்து கொஞ்சம் பொரியையாவது சாப்பிடு” என்றான் மடையன்.


“பொரியைச் சாப்பிடாவிட்டால் விடமாட்டார்கள்” என்று நினைத்து, கொஞ்சம் பொரியைச் சாப்பிட்டார் தெருக்கூத்து நடிகர்.


“பொரி கொடுத்ததற்கு நன்றி! நான் போய் வருகிறேன்” என்று நகரத் தொடங்கினார் நடிகர்.


“என்ன? பொரியைத் தின்றுவிட்டு சும்மா போகிறீர்கள்? எங்களுக்கு வேண்டிய வரங்களைக் கொடுங்கள்” என்றார் பரமார்த்தர்.


“வரமா?” அதென்ன?”


“ஆமாம்! குசேலர் வீடு பொன்னாக மாறியது போல எங்கள் மடமும் தங்கமாக மாற வேண்டும். எங்கு பார்த்தாலும் பொற்காசுகளும், வைரங்களும் மின்ன வேண்டும்!” என்றான்.


“எங்கள் கந்தல் உடைகள் பட்டாடையாக மாற வேண்டும்” என்றான் முட்டாள்.


“வரம் தராவிட்டால் ஆளை விடமாட்டோம்!” என்றான் மடையன்.


“சரி! நீங்கள் நினைத்தபடியே நடக்க்கடவது!” என்று அருள்புரிவது மாதிரி கையைக் காட்டினார் தெருக்கூத்து நடிகர்.


“ஆஹா! பொரிக்குப் பொன் கொடுத்த கிருஷ்ணா! உன் கருணையே கருணை” என்றபடி குருவும் சீடர்களும் அவர் காலில் விழுந்து வணங்கினார்கள்.


“ஆளைவிட்டால் போதும் என்று தெருக்கூத்து நடிகர் ஓட்டம் பிடித்தார்.”


“அப்பாடா! கடவுளேயே நேரில் பார்த்து விட்டோம்! அவரும் ஏமாந்து போய் வரம் கொடுத்து விட்டார்!” என்றார் பரமார்த்தர்.


“குருவே! நாம் மடத்துக்குப் போகும்போது, மடமெல்‘ம் தங்கமாக மாறி விட்டிருக்கும். மடம் முழுதும் பொற் காசுகள் குவிந்து கிடக்கும்! அதனால் இனிமேல் நீங்கள் நடந்து போகக் கூடாது!” என்றான் மட்டி.


“எங்காவது பல்லக்குக் கிடைத்தால் வாங்கி விடலாம்” என்றான் மடையன்.


போகும் வழியில் ஒருவன் பாடை கட்டிக் கொண்டு இருந்தான். அதைக் கண்ட முட்டாள், “குருவே! இதோ பாருங்கள் பூப்பல்லக்கு! இதையே விலைக்கு வாங்கி விடலாம்!” என்றான் மடையன்.


பாடை கட்டியவனிடம் சென்ற மட்டி, “இந்தப் பல்லக்கு என்ன விலை?” என்று விசாரித்தான்.


“இது பல்லக்கு இல்லை” என்றான் பாடை கட்டியவன்.


“நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல! இது பல்லக்கேதான். உனக்கு வேண்டிய பணம் தருகிறோம்” என்றான் மடையன்.


சீடர்களின் தொல்லையைப் பொறுக்காமல், “நான் வேறு ஒன்று செய்து கொள்கிறேன்; நீங்கள் இதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான், அவன்.


பரமார்த்தரும் மகிழ்ச்சியோடு பாடையில் ஏறி அமர்ந்து கொண்டார்.


இருட்டத் தொடங்கியதும், முட்டாள் கொள்ளிக் கட்டையைத் தூக்கியபடி முன்னே நடந்தான். மற்ற சீடர்கள் பாடையைத் தூக்கி வந்தனர்.


சிறிது தூரம் வந்ததும், “ஒரே தாகமாக இருக்கிறது” என்றபடி பாடையை இறக்கி வைத்தார்கள், சீடர்கள்.


ஐந்து பேரும் தண்ணீரைத் தேடிச் சென்றபோது, பரமார்த்தர் விழித்துக் கொண்டார். “என்ன? யாரையுமே காணோம்?” என்றபடி சீடர்களைத் தேடி வேறு பக்கம் சென்றார்.


அப்போது அந்த வழியாக வந்த நாய் ஒன்று பாடையில் ஏறிப் படுத்துக் கொண்டது.


திரும்பி வந்த சீடர்களோ, எதையும் கவனிக்காமல் பழையபடி பாடையை தூக்கிக் கொண்டு புறப்பட்டனர்.


மடத்தை நெருங்கியதும், நாய் விழித்துக் கொண்டது. “லொள், வள்” என்று குரைத்தது.


அவ்வளவுதான்! பாடையைத் “தொப்” என்று கீழே போட்ட சீடர்கள், “ஐயையோ! இதென்ன அதிசயம்? நம் குரு நாயாக மாறி இருக்கிறாரே!” என அலறினார்கள்.


“அந்தக் கிருஷ்ணக் கடவுள் தான் ஏதோ மந்திரம் போட்டு விட்டார்!” என்றான் முட்டாள்.


“நம் மடம் கூடத் தங்கமாக மாறாமல், பழையபடி அப்படியே இருக்கிறதே!” என்று துக்கப்பட்டான் மண்டு.


அப்போது இருட்டில் விழுந்தடித்து ஓடிவந்த பரமார்த்தர், “புத்திகெட்ட சீடர்களே! என்னைப் பாதி வழியிலேயே விட்டு விட்டு வந்து விட்டீர்களே!” எனத் திட்டினார்.


“குருநாதா!” அந்தக் கிருஷ்ணக் கடவுளை நம்பினோம்! அவரும் பொரி வாங்கித் தின்று விட்டு, நம்மைக் கைவிட்டு விட்டாரோ!” என்று ஒப்பாரி வைத்தனர் சீடர்கள்.


பரமார்த்தரும் சீடர்களும் சேர்ந்து கொண்டு புலம்பினார்!.



எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.