This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Friday, 4 January 2019

Anubama karthik's தோல்வி நிலையென நினைத்தால் 19


Click here to get all parts


தோழனாய் வந்து விட்டேன்  தோள்மீது சாய்த்து கொள்ளு


ஆறுதலாய் நானிருக்க ஆசுவாச படுத்திக் கொள்ளு


தூயவளே துயர் நீங்கும் நாட்கள்


இனி தொலைவில் இல்லை நம்பிவிடு


 


நிறை மாத கர்ப்பிணியான ராதாவுக்கு மெல்ல செய்தி சொல்லபட்டு ஜானகியின் துணையுடன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர் விபத்தில் ரத்த சேதம் அதிகமாக இருந்ததால் உயிர் காக்க ரத்தம் தேவைப்படுமென டாக்டர்கள் சொல்லிவிட ரத்தம் கிடைக்காமல் அலைந்தனர் ஷேஷகிரியும் ரங்கநாதனும். ஆனந்தின் பெற்றோரோ தகவல் கிடைத்தவுடன் கோபத்தில்  தங்களுக்கு அப்படி ஒரு மகனே இல்லை என சொல்லிவிட்டார்கள். எதிர்பாராதவிதமாக லஷ்மியின் ரத்தபிரிவும் ஆனந்தின்  ரத்தபிரிவும்  ஒன்றாக அமைந்துவிட சரியான நேரத்தில் ரத்ததானம் கிடைத்து உயிர் பிழைத்தான் ஆனந்த்


 


ஆனந்த் கண் விழித்து நன்றி சொல்ல முனைந்த போது தடுத்த லக்ஷ்மி ராதாவிடமும் ஆனந்திடமும் எதுக்கு இதெல்லாம் எனக்கு கூட பிறந்த பாஸ்கர் அண்ணாவ போலதான் ஆனந்த் அண்ணாவும் இவங்களுக்குள நான் எந்த வித்தியாசமும் பாக்குறது இல்ல அதனால தயவுசெஞ்சு நீங்க ரெண்டுபேரும் நன்றி சொல்லறத நிறுத்தரீங்களா என கேட்டாள்


 


அன்றிரவே ஸ்ரீருத்ரா பிறந்து விட குழந்தை வந்த சந்தோஷத்தில் அனைவரும் இயல்புக்கு திரும்பினர் சகுந்தலா பச்சை உடம்புகாரியாக பிறந்த வீட்டில் இருக்க கௌசல்யாவின் பிரசவமும் லக்ஷ்மி ,ஜானகியின் பொறுப்பிலேயே நடந்தது


 


ஒரு குழந்தை வீட்டில் இருந்தாலே நேரம் போவது தெரியாது இங்கோ மூவரின் சேட்டையால் வீடே களைகட்டியது மேலும் ஒரு வருடம் ஓடிப்போக இன்னமும் குழந்தை பாக்கியம் லக்ஷ்மிக்கு  கிட்டாத்தால் உறவுகளின் கேலிப்பேச்சுக்கு ஆளானாள் அம்மாதிரி நேரங்களில் இறுக்கமான முகத்துடன் வளையவரும் ஜானகியை புரிந்து முடியாமல் கொள்ள தடுமாறினாள்


கேலிகுத்தல்கள் தாங்க முடியாமல் மருத்துவ பரிசோதனைக்கு தம்பதிகள் சென்ற போதோ கர்பப்பை பலகீனமாக இருப்பதால் லஷ்மியால் ஒரு குழந்தைக்கு தாயாக முடியாதென மருத்துவகள் கைவிரித்துவிட லக்ஷ்மியோ நொந்துபோனாள்


 


சகோதர்களின் அயராத உழைப்பால் தொழில் விரிவடையத்துவங்க அந்தஸ்து பார்த்து முன்னர் ஒதுக்கிய சொந்தங்கள் யாவும் இப்போது ஒட்டிக்கொள்ள துவங்கின அதிலும் ஷேஷகிரியின் அத்தை ஒருவர் அவருடைய பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துதர முன்வந்தார்  இன்னமும் கொஞ்ச நாளில் தாங்கள் நடத்தும் புதுமனை புகுவிழாவுக்கு பிறகு இது குறித்து பேசலாமென ஜானகி சொல்லிவிட இதை கேட்ட லக்ஷ்மியோ துடித்துவிட்டாள்


 


புதுமனை புகு விழாவுக்கான வேலைகள் வேகமாக நடந்தன வேலைகளின் நடுவே ஒருநாள் லக்ஷ்மியை தவிர அனைவரும் எங்கோ சென்றுவர இது எதுவுமே மனதில் பதியாமல் நடைபிணம் போல் ஆனாள் லக்ஷ்மி எதோ ஒரு நம்பிக்கையில் இரவின் தனியான வேளையில் தன் கணவனிடம் என்னங்க எல்லாரும் எங்க போய் இருந்தீங்க என கேட்க அவனோ சரியாக பதில் சொல்லாது மழுப்ப கோபத்தில் எனக்கு தெரியும் எல்லாரும் பொண்ணு பாக்கதேனே போய் இருந்தீங்க? என கேட்டாள்


 


லக்ஷ்மியை சீண்டும் எண்ணத்துடன் இருந்த ஷேஷகிரியோ ஆமாம் நானும் அம்மாவும் நம்ம குடும்பத்துக்கு வரவேண்டிய ஒரு வயசு பொண்ணைத்தான் பாக்கபோனோம் எங்க எல்லாருக்கும் அவளை பிடிச்சுபோச்சு உனக்கு பிடிச்சுருந்தா போதும் முறைப்படி அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம் என்ன சொல்ற?தாளாத துக்கத்தில் இருந்த லக்ஷ்மியோ உங்களுக்கு பிடிச்சா போதுங்க நீங்க பாத்து கூட்டிட்டு வந்திடுங்க நான் எப்போதும் உங்க சந்தோஷத்துக்கு தடையா இருக்கமாட்டேன் என்றாள்


 


அப்போ கண்டிப்பா நீ நம்ம வீட்டு புதுமனை புகுவிழா அன்னைக்கு அவளை பாக்கலாம் ஆரத்தி எடுக்க ரெடியா இருந்துக்க என்றான் அந்த நாளும் வந்தது பொழுது விடியும் போதே எங்கோ வெளியே போய் விட்டு வந்த ஆனந்தும் ராதாவும் ஆரத்தி தட்டுடன் வாசலுக்கு வரும்படி லக்ஷ்மியை வற்புறுத்தி அழைத்து வந்தனர்


 


வாசலுக்கு வந்த லக்ஷ்மியோ ஜானகியுடன் நின்றிருந்த அந்த ஒரு வயசு பெண்ணை பாத்து திகைத்து நின்றாள் ரோஜா பூவை பிரதி எடுத்ததுபோல பால்வண்ண நிறத்துடன் தன் கோலிகுண்டு கண்களால் சுற்றி இருந்தவர்களை பார்த்தவண்ணம் மலங்க மலங்க விழித்தாள் அந்த குட்டி இளவரசி


 


என்னம்மா வந்தவங்கள வாங்கனு கூப்பிட மாட்டாயா? ஆரத்திய வாங்கி சீக்கிரம் எடுத்து அனுப்பு ப்ரபா ராதாவையும் கூப்பிட்டுகோ என்றாள் ஜானகி ஆமாம் அந்த விழாவுக்கு பாஸ்கரும் தன் மனைவியுடன் வந்திருந்தான் புதுமனை புகுவிழாவும் ஒரு குழந்தைய தத்தெடுக்கும் விழாவும் இனிதே முடிய எல்லாரும் சேர்ந்து கொடுத்த அதிர்ச்சிய தாங்க முடியாம நடந்தத நம்பவும் முடியாம அமர்ந்திருந்தாள் லக்ஷ்மி அவளை தேற்றிய ஜானகியும் ஷேஷகிரியும் நடந்ததை சொல்ல துவங்கினர் முதலில் இரண்டாம் திருமண பேச்சு வந்ததே அதிர்ச்சி என்றாலும் மறுப்பை யாருக்கும் தெரியாமல் தன் நாத்தனாரிடம் சொல்லி இருந்தார் லக்ஷ்மி மேல் கொண்டு தன் மக்களின் வாழ்வில் பிடிப்பு ஏற்பட ஒரு குழந்தையை தத்து எடுப்பது ஒன்றே நல்ல வழி என முடிவு எடுத்தார் ஜானகி பின்னர் தன் எண்ணத்தை ஆனந்த் ஷேஷகிரி ரங்கநாதனிடமும் சொல்ல அவர்களின் ஆதரவுடன் அதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது


 


பாஸ்கரை பற்றி ஷேஷகிரி மூலம் அறிந்த ஜானகி ஒரு நல்ல நாளில் தன் குடும்பம் புடை சூழ அங்கு சென்று பாஸ்கரை சமாதானப்படுத்தி விட்டு வந்தார் அன்றே பாஸ்கருக்கு தெரிந்த அனாதை இல்லத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர் புதுமனை புகுவிழாவில் இதை அறிவிக்க நினைத்திருக்க ஷேஷகிரியோ அன்றே தத்தெடுப்பதும் நடைபெறவேண்டுமென கூறிவிட்டான்  ஷேஷகிரியின் விருப்பபடி லக்ஷ்மிக்கு இன்ப அதிர்ச்சி தர வேண்டி ரகசியம் காத்தனர் அனைவரும்.


 


தன் வாழ்வில் வற்றாத இன்பமாக ஜீவநதியென வந்த தன் மகளுக்கு சரயு என பெயரிட்டாள் லக்ஷ்மி தன் காதல் கணவனை தவறாக நினைத்தை அவனிடமே சொல்லி மன்னிப்பும் கேட்டாள் அதற்க்கு அவனோ அட அசட்டு பொண்டாட்டியே உன்னை விட்டு இன்னொருத்தி கூட எனக்கு கல்யாணமா? என் குடும்பத்த இவளோதான் நீ புரிஞ்சு கிட்டயா வெளில சொல்லிறாதே எல்லாரும் உன்னை புத்திசாலினு நினைச்சுகிட்டு இருக்காங்க தயவு செஞ்சு கெத்த காப்பாத்திகோ தாயே என கலாய்க்க  அங்கே ஆனந்ததின் சாரல் வீச துவங்கியது


(தொடரும்)


No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.