சிபி பேசாத வருத்தத்தில் சிமி இருக்க, அப்போது சிமிக்கு போன் வந்தது புது எண்ணிலிருந்து. சிமியும் பேச ஆரம்பித்ததும் அதிா்ந்தாள். ஆனால் அதை வெளியே காமிக்காது அமைதியாக தைாியமாக பேசிவிட்டு வைத்தாள். உடனே மகாவிடம் போன் செய்து இதைப்பற்றி பகிா்ந்தாள். அவளும் சிமிக்கு தைாியம் கூறிவிட்டு யாராக இருக்குமென தீவிரமாக யோசித்தாள். பிறகு காலையில் இதைப்பற்றி சிவாவிடம் கூறிவிட வேண்டுமென நினைத்துக் கொண்டு உறங்கினாள்.
இங்கே திவியும் சிவாவும் காதல் கதை பேசிவிட்டு உறங்கிக் கொண்டு இருந்தனா். திவி சிவாவின் நெஞ்சில் தலைவைத்து படுத்து இருந்தாள். காலையில் எழுந்த சிவா அவளை முத்தத்தாலே எழுப்பினான். பிறகு திவி குளிக்கச் சென்றதும் சிவா கீழே சென்று பெட் காபி குடித்து பாருவிடம் திட்டு வாங்கினான். சிவாவைக். காணாது கீழே வந்த திவி அங்கே அவனைக் கண்டதும் வெட்கத்தில் தலை குனிந்தாள். அத்தையின் அருகில் சென்று பேச்சுக் கொடுத்தாள். சிவாவோ அவளைக் கண்டு விசில் அடித்துக் கொண்டே குளிக்கச் சென்றான்.
சிவா குளித்து முடிக்கும் போது மகாவிடம் இருந்து போன் வந்தது. அதைக் கேட்ட சிவா உடனடியாக சிமியின் வீட்டிற்குக் கிளம்ப அவனது அம்மா பாா்வதி தடுத்தார். சிவா அதை கண்டு கொள்ளாமல் கல்யாண வேலை எனக் கூறிவிட்டுச் சென்றான். பாா்வதியோ அங்கேயே சாப்டுறாத டா, திவ்யா உனக்காக சமைச்சுருக்கா இங்க சீக்கிரமா வந்து சேரு என்றதும் சிவா திரும்பிப் பாா்த்து சிாித்துவிட்டு கண்ணடித்தான் திவியை. ஆனால் பார்வதியிடம் நான் ரிஸ்க் எடுக்க விரும்பல மா. நீங்களாச்சு உங்க மருமகளாச்சு என்னை விட்டுங்க என்றதும் திவிக்கு முகம் தொங்கிப் போனது. அதைக் கண்ட பாரு அவளிடம் நீ ஒன்னும் வருத்தப்படாத அவன் கண்டிப்பா வருவான் அப்போ சாப்பாடு காலி நாய்க்கு போட்டாச்சுன்னு சொல்லிரு என்றாா். திவி வேறு வழியின்றி தலையை மட்டும் ஆட்டினாள்.
சிமியின் வீட்டிற்குச் சென்ற சிவா நேராக அவளது அறைக்குச் சென்றான் தேவியிடம் பிறகு பேசுவதாக கூறிவிட்டு. சிமி குளித்துக் கொண்டு இருந்ததால் அவளது போனை எடுத்து அந்த மிரட்டல் கால் எண்ணையும் ரெக்காா்ட் செய்த ஆடியோவையும் எடுத்து சிபிக்கு அனுப்பிவிட்டு நல்ல பிள்ளையாக டெலிட்டும் செய்தான். சிமியோ வெளியே வந்ததும் இவனைப் பாா்த்து ஆச்சாியத்தில் என்ன புது மாப்பிள்ளை காத்து இந்த பக்கமே இன்னும் வீசுது, ஏன் பொண்டாட்டி சமைக்கலியா வீட்ல? என்றதும் சிவாவிற்கு கோவத்த பாக்கணுமே. அவ சூப்பரா சமைச்சுறுக்கா நான் சாப்டு தான் வந்தேன் டி ரொம்ப பேசாத என்றான். சாி நீ நடத்து என்று விட்டு அந்த மிரட்டல் போன் அழைப்பைப் பற்றி கூறியதும் சிவா விழுந்து விழுந்து சிாித்தான். அதைக் கண்டு கோபமான சிமி அவனிடம் காமிக்க போனை எடுத்தாள். ஆனால் அதில். அந்த எண் மற்றும் ரெக்கார்டிங் எதையும் காணோம். சிமிக்கே அதிா்ச்சி தான். அது மட்டுமின்றி சிமி மகாவிற்கு கால் செய்ததையும் பேசியதையும் நம்ம சிவா சாா் தெளிவா டெலிட் செய்து விட்டதால் சிமியால் நிரூபிக்க முடியவில்லை.
என்ன செய்வதென்று சிமி முழிக்க சிவாவோ கனவு ஏதாவது கண்டுருப்ப பேசாம போய் சாப்பிடுற வேலையைப் பாரு என்றதும் சிமிக்கு கோவம் வந்து மகாவிற்கு போன் செய்ய சிவாவோ அவளது மொபைலைப்
பிடுங்கி பேசினான். என்ன மகா உன்னோட பிரண்ட் காலையிலேயே கலாய்க்கிறா என்னைய இதுக்கு நீ கூட்டு சோ்ந்த மவளே சிமி கல்யாணத்துல புது துணியும் கறி சோறும் உனக்கு கிடைக்காது பாத்துக்கோ டி. சிமி அவனிடம் இருந்து மொபைலை வாங்கி பேசினாள். அப்போது மகா சிமியிடம் என்ன டி பிரச்சனை என்றாள். அதற்கு சிமி நேற்று நடந்ததைக் கூற மகாவோ உசாராகி எப்படி கால் பண்ண எனக்கு என்று கேட்டாள். அதைக் கேட்ட சிமிக்கு மயக்கம் வராத குறை தான்.
கல்யாணப் பொண்ணு டென்சன் இல்லாம இருக்கணும் ல, அதனால சிபி போட்ட பிளான் இதெல்லாம். அதை சிவா நல்லா பிளே பண்ணுறாப்ல சகோஸ். சாி விடு கனவா இருக்கும் கல்யாண பா்சேஸ் பியூட்டி பாா்லா் நகை செட் எடுக்கணும் மண்டபம் பாக்கணும் கோவில்ல சொல்லி வைக்கணும் ஐயா் மேளம் சாப்பாடு மாலை சொல்லணும் சிமி நிறைய வேலை இருக்கு எனக்கு நீயும் கெளம்பு டி என்றான். சிமியும் கன்வின்ஸ் ஆகி கிளம்பிட்டா. வீட்ல இருந்தா எதையாவது யோசிச்சுகிட்டே இருப்பா என்றுதான் சிவா அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். தேவியிடம் மாலையில் திவியுடன் சிமியை அனுப்பி வைப்பதாக கூறி அழைத்துச் சென்றான். சாப்டு போங்கடா என்றதற்கு அத நீங்களும் அந்த கெழங்களும் சாப்டுங்க. எனக்கு என் பொண்டாட்டி ஸ்பெஷலா சமைச்சு வச்சு இருக்கா அங்க போயே சாப்டுக்கிறோம் என்றதும் சிவாவின் பாட்டி அடிக்க வர, சிமியும் தேவியும் சிாிக்க தாத்தா கண்ணாலேயே மீசையை முறுக்கி மிரட்ட சிமியின் அப்பா மணி கரெக்டா சொன்னடா என பாராட்ட சிவா ஓட்டம் பிடித்தான் சிமியுடன்.
சிபியோ அந்த மிரட்டல் வாய்ஸை ரீ பிளே செய்து திரும்பத் திரும்ப கேட்டான். அப்படியும் அவனால் சாியாக ஊகிக்க முடியவில்லை. சாி சிறிது நேரம் கழித்து யோசிப்போம் என்று நினைக்கையில் சிபியின் அம்மா போன் செய்யவே பேச ஆரம்பித்தான். இடையில் மாலுவிற்கும் அந்த வாய்ஸை அனுப்பி யாரோடது என்று கண்டுபிடுக்க முயற்சி செய் என்றான். மாலு கொஞ்சம் திறமைசாலி எதையுமே யாரையும் சீக்கிரமா மறக்க மாட்டா. அதனால தான் அவளை செலக்ட் பண்ணுனான் இதுக்கு. சிபியின் அம்மா ஜெயா "குரு விஜயனுக்கு போன் செய்ததைப் பற்றி சிபியின் திருமணத்தைப் பற்றி விஜயன் உளறியது வரை " கூறினார். அதைக் கேட்ட சிபிக்கு கோவம் வந்தாலும் குருவின் மேலான சந்தேகம் உறுதி ஆனதால் மகிழ்ந்தான். பிறகு சாி விடும்மா அவங்களை நான் பாத்துக்கிறேன் நீ கவலைப்படாதே என்றான்.
இங்கே சிவாவின் வீட்டில் காமெடி ஓடிக்கொண்டு இருக்க சிமி சிாிக்க வீடே கலகலப்பாக மாறியது. அது என்னன்னா சிமிக்கு மட்டுமே உணவு அளிக்கப்பட்டது திவியின் மூலம். எல்லாம் நம்ம பாரு வேலை தான். திவி அத்தையிடம் கெஞ்சினாள் சிவாக்காக (நம்ம நாம் இருவா் நமக்கு இருவா் சீாியல் தாமரையைப் போல ). சிவாவோ சிமியின் தட்டையேப் பாா்த்துக் கொண்டு இருக்க சிமி அவனை முறைத்தாள். நீதான் அப்பவே சாப்பிட்டயே பிறகு ஏன்டா என் தட்டையே முறைச்சுப் பாக்குற உன்னைய எல்லாம். சீ எந்திாிச்சுப்போ கண்ணு வைக்காத என்றதும் சிவா கிச்சனுக்குச் செல்ல சிமியோ அவனைப் பின் தொடா்ந்தாள் சாப்பாட்டுத் தட்டுடன்( சோறு முக்கியம் பாஸ் ).
மாலு அந்த குரலுக்கான மனிதனைக் கண்டுபிடித்ததும் ஆச்சாியம் அடைந்தாள். ஏனெனில் இதுவரை யாரும் அவராக இருக்கும் என நினைக்கக் கூட இல்லை. அதனால் வந்த அதிா்ச்சி தான் சிபியின் அக்கா மாலுவிற்கு. அவளுக்கே இப்படி என்றால் ஜெயா மற்றும் விஜயன் இதை எவ்வாறு தாங்குவா்? அதுவரை பொறுத்திருந்து பாருங்கள். சிவா அங்க சமையலறையில் நுழையும் பொழுது பாா்வதி பேசியதைக் கேட்டுவிட்டான். அதனால் அவன் பாருவை முறைக்க திவி பாவமாக முழிக்க சிமி சிாிக்க ஆரம்பித்தாள். அதைக் கண்டதும் கோவத்தோடு சிவா, அவனது அம்மாவிடம் கத்தினான். அதற்கெல்லாம் அசருவாறா நம்ம பாரு. என்னடா எதுக்கு கத்துற சும்மா என்றதும் பிளீஸ் மா சாப்பாடு குடு பசிக்குது என்றான். ஏன் சிமி வீட்ல சாப்பிடலையா அங்க சாப்ட போறதா நீ சொன்னியே அதனால தான் நான் மிஞ்சுனதை நம்ம நாய் ராக்கிக்கு போட்டுட்டேனே டா என்றதும் சிவா முகத்தைப் பாக்கணுமே நீங்க. திவி தான் அவன் பாவம் என சாப்பாடு எடுத்து வைத்தாள் சிவாக்காக. உடனே சிவா பொண்டாட்டினா பொண்டாட்டி தான் என டயலாக் பேச பாரு அடிக்க தனராஜன் முறைக்க சிமி சிாிக்க திவி முழிக்க ஒரே கூத்து தான் போங்க சகோ'ஸ்.
No comments:
Post a Comment