"சுமி எழுந்துடு... எல்லோருமே சாப்பிட போயிட்டாங்க.. நம்ம தான் லேட்" என ராம் எழுப்ப " சாரி ராம்.. வா போலாம்" என்று பஸ்ஸை விட்டு இறங்கி தாபாவுக்குள் சென்று கொண்டு இருந்தனர்...
" ஷ்ரவன் சார் உங்க டீஷர்ட் நல்லா இருக்கு.. ரொம்ப ஹேன்ட்சம்மா இருக்கீங்க" என பூஜா பேசிக் கொண்டு இருக்க அதைப் பார்த்து சுமி கடுப்பான முகத்தோடே ஷ்ரவனைக் கடந்து சென்றாள்.... அவள் கோபமாவதைப் பார்த்த ஷ்ரவனோ பூஜாவிடம் சிரித்து சிரித்து பேசிக் கொண்டு இருந்தான்..
" டேய் ராமா என்ன உன் டீம் மேட் பூஜா என்ன அங்கே அந்த மேனேஜர் சார் கிட்டே வழிஞ்சுட்டு இருக்கா"
" அவளுக்கு ஆரம்பத்திலே இருந்தே ஷ்ரவன் மேலே ஒரு இது தான்.. இப்போ அவர் சிரிச்சு பேசுறதைப் பார்த்தா அவருக்கும் பூஜாவைப் பிடிச்சு தான் இருக்கு போல.." என சொன்னவன் மனதினுள் "அவர் நேரம் போயும் போயும் பூஜா கிட்டே மாட்டி இருக்காரே.. அவள் கேரக்டரே சரி இல்லை... அவர் பாடு ரொம்ப பாவம்" என நினைத்துக் கொண்டான்..
சுமி பேருக்கு உணவைக் கொறித்துக் கொண்டு பஸ்ஸில் ஏறி அமர்ந்துவிட்டாள்... அதற்குப் பின்பு எதையோ தொலைத்ததுப் போல் அமைதியாய் இருப்பது அவளுக்குப் பிடிக்காமல் போக இயல்பான தன் குணத்துக்கு மாறினாள்.. அவளுடைய வால்தனத்தை மொத்தமும் அவிழ்த்து விட்டு பஸ்ஸையே சிரிப்பு சத்தத்தில் அதிர வைத்துக் கொண்டு இருந்தாள்...
" மறுபடி ட்ரூத் அன்ட் டேர் கேமை கன்டினீயூ பண்ணலாம் கேய்ஸ்... உதய் உன் கிட்டே இருந்து முதலிலே ஆரம்பிச்சுறலாம்... உங்கள் டீம் மேட்லயே உங்களுக்கு யாரைப் பிடிக்கும் அப்புறம் எதனாலேனு சொல்லுங்க மிஸ்டர். ஒதை" என சுமி பேசிவிட்டு உதய்க்கு சிக்னல் கொடுக்க அவனும் அதை பக்காவாக கேட்ச் பண்ணிவிட்டான்...
" என் டீம்ல எனக்கு ரொம்ப பிடிச்சது பவித்ராவை தான்.. அவங்க அமைதியான குணம் என்னை அதிகமா கவர்ந்து இருக்கு... அப்புறம் இன்னும் அதிகமா அவங்களை பிடிச்சு போனதுக்கான காரணங்கள் இருக்கு.. அதை அவங்க கிட்டே தனியா நான் சொல்லிக்குறேன்... ஓகே தானே பவி" என கேட்க அவள் கொஞ்சம் சிவந்த படியே சரி என தலையாட்டினாள்... அதைப் பார்த்ததும் உதயின் மனது ஆனந்தமானது.. சுமி அவனைப் பார்த்து கண்களால் சிரித்த படியே " ஓகே நெக்ஸ்ட் ராகுல் உனக்கு தான் இந்த கேள்வி.. நீ எத்தனை நாள்க்கு ஒரு முறை குளிக்கிறே.. உண்மையை சொல்லு" என பேசிக் கொண்டு இருந்தவளின் முகத்தை ஷ்ரவனின் உள்ளம் நிரப்பிக் கொண்டது...
உன் சிறு புன்னகை
போதும் சிதறிய
என் இதயத்தை
சீர் செய்ய...
" அப்பா ஊர்க்காரி பல நாள் கழிச்சு இப்படி சரவெடியாட்டம் பேசுறதை பார்க்கிறேன்.. இவளை ஏன் எனக்கு இவ்வளவு பிடிச்சு இருக்கு.. இந்த சேட்டை பண்ற குணமும் அந்த துரு துரு கண்ணும் என்னை காதல்ன்ற வலையிலே எழுந்துக்க முடியாம சிக்க வைச்சிடுச்சே..." என்று அவளைக் கொள்ளை கொண்டவளின் நினைவில் மூழ்கினான்...
உன்னுடைய ரோஜா
பாதம் பூமியிலேயே
அழுந்தப் படியாத போது
என மனதினில் மட்டும்
எப்படி அழுத்தமாக கால்
பதித்து சென்றது...
💐💐💐💐
"என்ன இது ஒரு வாரம் ஆச்சு ஏன் சுமி காலேஜ்க்கு வரல.. அவளுக்கு என்ன ஆகி இருக்கும்.. அவளுக்கு ஏதாவது ஆச்சுனா என்னோட நிலைமை என்ன ஆகும்" என யோசித்துக் கொண்டு இருந்தவன் திடீரென ஸ்தம்பித்தான்..
அவளுக்கு ஏதாவது ஆச்சுனா என் நிலைமை என்ன ஆகும்னு நானா யோசிச்சேன்.. ஏன் இப்படி யோசிச்சேன்.. சுமி காலேஜ்க்கு வராதது ஏன் என்னை இவ்ளோ பாதிக்குது.. அவள் கண்ணைப் பார்க்காம என்னாலே இருக்க முடியலே ஏன்.. இந்த பல ஏன் களுக்கு ஒரே பதிலாய் காதல் என்ற ஒற்றை வார்த்தை பதிலாய் தோன்றியது...
கருத்தறிக்கவும் இல்லை
பத்து மாதம் சுமக்கவும் இல்லை
பனிக்குடமும் வெடிக்கவில்லை
இருந்தும் என் கண்கள்
பிரசவித்தது என் காதலை....
அவனால் வகுப்பை கவனிக்கவே முடியவில்லை என அவன் ரூமிற்கு சென்றான்.. தனக்குள் காதல் எப்படி உண்டானது என யோசிக்க ஆரம்பித்தவன் சுமியின் நினைவில் மூழ்க அவளுடைய ஒவ்வொரு செயலையும் நினைத்து சிரித்துக் கொண்டு இருந்தான்.. ஆனந்த் அவனுடைய நெருங்கிய தோழன்.. ஷ்ரவன் இவனிடம் மட்டுமே அவனுடைய தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்து கொள்வான்.. ஆனந்தும் ஷ்ரவனின் மீது அதிகமாக பாசமும் அக்கறையும் கொண்டவன்... அவன் அறைக்குள் நுழைய தனியாய் சிரித்துக் கொண்டு இருந்த ஷ்ரவனை வித்தியசமாய்ப் பார்த்தான்..
"டேய் ஷ்ரவன் என்னடா வர வர தனியா சிரிக்கிற.." என ஆனந்த் கேட்க " எனக்கே தெரியலடா.. என் க்ளாஸ்ல சுமினு ஒரு பொண்ணு இருக்கா... ஏன்னு தெரியலடா... அவளை ரொம்ப பிடிச்சு இருக்கு"
"என்னடா லவ்வா"
"தெரியலடா.. ஆனால் அவளை பார்த்தா என் மனசு சந்தோஷம் ஆகிடுது.. அந்த கண்ணை ஒரு தடவை தான்டா பார்த்தேன் அதுலேயே டோட்டல் ப்ளாட் டா... அதுவும் அவள் தூங்குற அழகு இருக்கே அதைப் பார்க்க புண்ணியம் பண்ணி இருக்கணும் டா.. தூக்கக் கலக்கத்திலேயே என்னைப் பார்த்துட்டு படக்குனு எழுந்து உட்கார்ந்தாடா.. அது அவ்ளோ க்யூட்டா இருந்தது.."
" என்ன டா பொண்ணுங்க கிட்டேயே.பேச மாட்டே... ஆனால் இந்த பொண்ணைப் பத்தி இப்படி பேசிட்டே இருக்கே..சார் நல்லா மாட்டிக்கிட்டீங்க போல.. டேய் முதலில அந்த பொண்ணு கிட்டே போய் பேசிடு டா"
" டேய் உனக்கே தெரியாதா எனக்கும் பொண்ணுங்களுக்கும் ஏழாம் பொருத்தம்னு.. அவளுக்கு என்னை பிடிக்குமானே முதலிலே தெரியல.. முன்னே லாம் கோபமாவது ஒரு லுக் விடுவா.. இப்போலாம் என் முகத்தை கூட பார்க்க மாட்டேங்குறா டா.. என்னைப் பார்த்தாலே கீழே குனிஞ்சுக்கிறா.. முதலிலே அவளுக்கு என்னை பிடிச்சு இருக்கானு தெரிஞ்சுட்டு அப்புறமா பேசனும்டா.."
" சரி மச்சான் இ.வி.ஸ் சப்ஜெக்ட் இரண்டு க்ளாஸ்க்கும் சேர்த்து ஒரே ஸ்டாப் தான்டா எடுக்குறாங்க.. சோ நான் அவளை கவனிச்சுட்டு சொல்றேன்..சரியா டா"
" ஓகே டா"
"அப்புறம் அவள் க்ளோஸ் ப்ரெண்ட் விஷ்வா வோட ரூம்க்கு ஷிப்ட் ஆகிடு டா.. கொஞ்சம் அவளைப் பத்தி அவன் கிட்டே பேசிப் பாரு.."
" ம்ம் ஓகே டா.. ஆனால் நான் யார் பத்தியும் அதிகமா பேச மாட்டேனு அவனுக்கு தெரியும்.. இப்போ இவளைப் பத்தி கேட்டா அவன் தப்பா நினைக்க மாட்டானா?"
" டேய் ஷ்ரவன் இதுக்கு போய் இவ்ளோ யோசிக்குற.. முதலிலே அவளைப் பத்தி தெரிஞ்சுக்கோ டா"
" ஓகே டா.. அப்படியே பண்ணிடலாம்" என்று சந்தோஷமாக சிரித்துக் கொண்டு அவன் விஷ்வாவின் ரூமிற்கு ஷிப்ட் ஆனான்...
"ஹே அனிதா என்னடி இது... எவன் இந்த இ.வி.ஸ் சப்ஜெக்ட்லாம் கண்டுபிடிச்சான்.. தூக்கம் தூக்கமா வருது.. சுத்தமா எனக்கு பிடிக்கல.. இது வரை அரீயர் வைக்காம தப்பிச்சுட்டு வந்தேன்.. ஆனால் இவிஸ் ல வெச்சுடுவனோனு பயமா இருக்கு டீ"
" அடிப்பாவி பத்தாவது படிக்கிற பிள்ளைகளுக்கு கூட இந்த சப்ஜெக்ட் அத்துப்படி.. இதுல போய் அரீயர் வைப்பேன்ற"
" எனக்கு நம்ம டிபார்ட்மென்ட் சப்ஜெக்ட் தான்டி பிடிக்கும்.. இந்த மாதிரி கதை எழுதுற சப்ஜெக்ட்லாம் வந்தா கோட்டை விட்டுடுவேன்"
" வித்தியாசமா இருக்கேடி நீ"
" எல்லாம் manufacturing defect" என சிரித்தாள்...
" எவ்ளோ அழகா இருக்கு பாரு டா அவள் ஸ்மைல்... சரியான வாலு.." என ஷ்ரவன் சொல்ல ஆம் என ஆனந்த் ஆமோதித்தான்..
டேய் அவள் முதல் பென்ச்ல உக்கார்ந்து இருந்தாலும் லைட்டா திரும்பி உன்னை சைட் அடிக்க தான்டா செய்யுறா... அவள் அப்படி பார்க்கும் போதுலாம் அவள் கண்ணில காதல் தெரியுதுடா என மூன்று மாதமாய் அவளை கவனித்ததை வைத்து ஆனந்த் சொல்ல ஷ்ரவன் ஆச்சர்யப்பட்டான்..
" டேய் உண்மையா தான் சொல்றியா..அவள் பார்த்து நான் பார்த்ததே இல்லை டா.. நான் பார்த்தாலே கீழே குனிஞ்சுக்குறா.."
" அவள் நீ பார்க்காத அப்போ உன்னை சைட் அடிக்குறாடா" என்று சொல்லிய நண்பனை சந்தோஷமாக கட்டிப்பிடித்து கொண்டான்...
"டேய் ஷ்ரவன் கால்குலேட்டர் இந்த எக்ஸாம்க்கு தேவைப்படுமா" என ஆனந்த் கேட்டபடி வர " அடேய் நான் இ.வி.ஸ் எக்ஸாம்க்கே கால்குலேட்டர் கேப்பேன்" என ஷ்ரவன் சொல்ல ஆச்சர்யமாய் சுமி பார்த்தாள்..
இது நம்ம அனிதா கிட்டே சொன்ன டயலாக் ஆச்சே அதே டயலாக்க என்ன இவன் சொல்றான் என அவனைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் அவனுடைய நண்பன் பார்க்க சட்டென கீழே குனிந்து கொண்டாள்...
" டேய் அவள் உன்னைப் பார்த்துட்டா.."
"சூப்பர் டா"
" மச்சான் உன் கிட்டே ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே.. நீ லவ் பண்றேனு சொல்லி உன் படிப்புல கோட்டையை விட்டுறாதே.. முன்ன மாதிரிலாம் இப்போ உன் மார்க் இல்லை ரொம்ப கம்மியா இருக்கு.. ஒழுங்காக படிக்கிற வேலையும் சேர்த்து பாரு டா" என ஆனந்த் சொல்லிக் கொண்டு இருக்க அவனோ அவளை சைட் அடிப்பதிலேயே மும்முரமாய் இருந்தான்...
நாளுக்கு நாள் அவளின் மீது கொண்ட காதல் வளர்ந்து கொண்டே போக அவளிடம் சொல்வதற்கான வழியும் வாய்ப்பும் தான் அவனுக்கு அமையவில்லை.. கடைசி வருடத்தில் கேம்பஸ் இன்டர்வியூ என வகுப்பு நடக்கவில்லை அவளை சைட் அடிக்கும் லேப் உம் இல்லை என அவன் மனதால் சோர்ந்தாலும் கிடைக்கும் நேரம் எல்லாம் அவள் மீது பார்வையை வீசிக் கொண்டு இருந்தான்.. அவனுக்கே புதிதாக இருந்தது.. பெண் என்றாலே ஒதுங்கி செல்லும் நானா இந்த பெண்ணை நாள் முழுக்க மனதினுள் நினைத்து கொண்டு இருக்கிறேன்.. இதற்கு காரணம் எல்லாம் இந்த காதலினால் தான் என சிரித்துக் கொண்டான்...
கரைவேன் என
தெரிந்து தான்
முழ்கினேன் இந்த
காதல் கடலில்....
No comments:
Post a Comment