This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Saturday, 20 April 2019

உமாசாரல்'s சாரலடி நீ எனக்கு 25&26


Click here to get all parts


Part – 25 


பூவின் முகவரி காற்று அறியும்மே ...

என்னை உன் மனம் அறியாதா...

பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்....

உன்னை பார்த்ததும் பொழியாதா.....

பல கோடி பெண்கள் தான்.....

பூமியில வாழலாம்.....

ஒரு பார்வ்வையால் மனதை...

பறித்து சென்றவள் நீயடி.... ஈஈஈ......

உனக்கெனவ்வே காத்திருந்தாலே.....

காலடியில் வேர்களும் முழைக்கும்......

காதலில் வலியும் இன்பம் தானே...தானே....

தந்தை அன்பு அது பிறக்கும் வரை....

தாயின் அன்பு அது வளரும் வரை...

தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ....

உயிரோடு வாழும் வரை........




"அந்த நொடி விஜய்யின் எண்ணம் இது தான் இவளை கார்னர் பண்ணதுல்ல தப்பே இல்லை"என இல்லாட்டி இவள் எனக்கு கிடைச்சுருப்பாளா இவ்ளோ காதலையும் ஆசையும் என் மேல வச்சுருக்கவளை எப்படி என்னால்ல விட முடியும்.இவள் என் மேல எவ்ளோ கோபத்தையும் வெறுப்பையும் காட்டினாலும் பராவாயில்லை நான் காத்திருப்பேன்.இவளை அப்படி கார்னர் பண்ணியதற்க்கு தண்டனையா நினைச்சுக்கிறேன்....என நினைத்தவன் அவள் முகம் நிமிர்த்தி கண்களில் காதல் வழியப்பார்த்தான்.........



அவளும் பார்த்தாள் ஆனால் அவனின் பார்வ்வையை சந்திக்க திறன் இன்றி தாழ்த்தி கொண்டாள்."சாரல் என்னை பாரேன்.அவளால் பார்க்க முடியவில்லை மாறாக அழுகை தான் வந்தது."சாரல் அழாதே அழாதேடி தாங்க முடியல்ல என்னால்ல.என் மேலதான் தப்பு இருக்கு என்னை கல்யாணம் பண்ணிட்டு எவ்ளோ வேணாம் அடி ஆனா ஆழாதே என்னால்ல தான்னு நினைக்கும் போது மனசு வேகுது.. 



அழுகையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்"நீங்க பண்ணத நினைக்கும் போதல்லாம் கோபம் வரும் பராவாயில்லையா....



ம்ம் பராவாயில்லை....




எப்போ கோபம் வந்தாலும் அடிப்பேன் பராவாயில்லையா...



ம்ம் அடி உன்னை அணைக்க தான் இந்த கை நீ அடிக்க மட்டும் தான் உரிமையிருக்கு அதனால்ல அடி,உன்னை சாய்ச்சுக்க தான் இந்த நெஞ்சு அதனால்ல உன்னோட அடிகளையும் சுகம்மா வாங்கிக்கும்....நீ எப்போ வேணாம் அடிக்கலாம்....



"ஆனா நீங்க ஆபீஸ் போயிடுவிங்கள்ளே அப்பறம் எப்படி அடிப்பேன்"என கண்களில் நீர் வழிய வெகுளியாய் கேட்டவளை இதம்மாய் அணைத்து கண்ணிர் வர சிரித்தான் விஜய்....



"அதையும் மீறி அவள் கண்ணுல்ல எனக்கான காதல் தெரியுதே அதை மட்டும் உணர மறுக்குறா எத்தனை நாள் இந்த காதலை உணராம மனசுல்ல வச்சு தவிக்க போறாளோ என பெரும் ஆற்றாமையாக இருந்தது விஜய்க்கு...



அவள் முகம் நிமித்தி பார்த்தவன்"நீ எப்போ கோபம் பட்டு என்னை அடிக்கனும் தோனுதோ அப்பல்லாம் எனக்கு போன் பண்ணு நான் ஓடி வந்துட்றேன் எனவும்"ம்ம் என தலையை ஆட்டியவளை பார்க்கும் போது எப்பொழுதும் இல்லாத காதல் பெருகியது....



மறுபடியும் அவளை அணைக்க வந்தவனை மார்ப்பில் கை வைத்து தள்ளி விட்டவளை திகைப்புடன் பார்த்தவன் அவளிடம் "கோபம் வந்துடுச்சாக்கும் என வினவ......



ஆமா என சொண்ணவளின் மீது கட்டுக்கடங்காத காதல் பெரிகியது.உனக்குத்தான் கோபம் அதனால்ல என்னை தள்ளி விடு ஆனா எனக்கு உன் மேல அவ்வளவு ஆசை அதனால்ல இங்க வா மறுபடியும் அவளை பற்றி இழுத்து அவள் திமிற திமிற அவள் இதழ்களில் முத்தமிட்டான்.....


அவனை தள்ளி விட்டவள் "இப்படியல்லாம் பண்ணா எனக்கு பிடிக்காது என சிடுசிடுக்க.....


ஆனா எனக்கு பிடிச்சுறுக்கே அவளை ஆசையா பார்த்து பதில் சொண்ணான்.... 



நகரின் பிரமாண்ட திருமண மண்டபம் சொர்க்கத்தையே இங்கு கொண்டு வந்தது போல அழங்கரிக்கப்பட்டிருந்தது.அங்கு மணப்பெண் அறையில் ஒரு தேவதைக்கு தங்களால் முடிந்த அளவு ஒப்பனை செய்து அழகு சேர்த்து கொண்டுருந்தனர்... 



சதிஷ்"அவனிடம் வந்து இந்தாடா இதை கட்டிக்க என்றான் பட்டு வேஷ்டியையும் சட்டையையும் கொடுத்து....



டேய் இது இடுப்புல்ல நிக்காதுடா......



அப்பறம் எப்படி சாரல் கழுத்துல்ல தாலிக்கட்டுவ இது கட்டாமல் அவங்க கழுத்துல்ல தாலியை கட்ட விட மாட்டாங்க நம்ம பெருசுங்க ஒழுங்க இதை கட்டுனா அவங்க கழுத்துல்ல தாலியை கட்டலாம் பார்த்துக்க"அப்பறம் இது ஒட்டிக்க கட்டிக்க வேஷ்டி தான்டா அப்படியே இடுப்புல்ல சுத்தி ஒட்டிக்க எனவும் அவனிடம் வந்து"அவனது தோலை சுற்றி நண்பேன்டா என்றான் விஜய்....



அப்பறம் நான் சாரலை பார்க்கனும் அவளை சுத்தி இருக்குற க்ரவுட விரட்டி விட சொல்லி சர்மிட்ட சொல்லு நான் வரேன் என்றான்..



ம்ம் என்றான்....



அவன் தாயாராகி அவள் அறைக்கும் வரும் போது யாரும் இல்லை"சர்மி மட்டும் தான் இருந்தாள்"குட் ஜாப் எனவும் என்ஜாய் மாமா என சொல்லி விட்டு வெளியே கிளம்பினாள்....



சாரலை பார்த்து பிரம்மித்து விட்டான்.இவள் இவ்வளவு அழகா என மயில் கழுத்து நிறத்தில் தங்க ஜரிகை போட்டு நெய்த பட்டில் அவளது அழகு அப்படியே கட்டிப்போட்டது விஜய்யை.....



இவளுக்கு இந்த மேக்கப்பே தேவை இல்லை என நினைத்தவன் அவள் பூங்கொடி மேனியில் தன் கண்களை ஏக்கம்மாய் தவளை விட்டவன் சாரலின் முறைப்பை வாங்கி கொண்டான்.....


அவனை கேலியாய் பார்த்தவள்"என்ன விஜய் சார் அக்ரிமெண்ட்ல்ல சையின் வாங்க வந்திங்களோ என நக்கலாய் வினவ.....


"பாரு இவளை பார்க்க ஆசையா ஓடி வந்தா நக்கல் பண்றத"திமிர் பிடிச்சவ்வ என நினைத்தவன் "ஆமா ஒரு வருஷ அக்ரிமெண்ட் இல்லை இது ஓராயிரம் வருஷம் என்னோட நீ வாழபோறத்துக்கான அக்ரிமெண்ட் ஆனா சையின்ன வேற மாதிரி வாங்க போறேன் என்றவன் அவளை ஒரு மாதிரி பார்த்து நெருங்கினான்.....



ஐய்யோ இவன் என்ன இந்த அழிச்சாட்டியம் பண்றான்."பாருங்க கிட்ட வராதிங்க என் ஷாரி எல்லாம் கலச்சுடும் தள்ளி போங்க என்றவளை சுவர் தடுக்க நின்றாள்.....



சும்மா பார்க்க வந்தவனை சையின் வாங்க வந்திங்களா அது வாங்க வந்திங்களான்னு சீண்டி பார்த்தவ நீ நான் சும்மா போனா நான் ஆம்பளையே இல்லை என்றவன் அவளை தொடாமல் லேசாய் அவள் இதழ்களில் தனது இதழ்களை ஒற்றி எடுத்தான்......



அவனை பிடித்து தள்ளி விட்டாள்"ஏன் சாரல் பேபி உன்னோட ஷாரி மட்டும் கலையக்கூடாது ஆனா என் சட்டை மட்டும் கலையலாம்மா ம்ம். எப்பபாரு என்னோட சட்டை மேல ஒரு காண்டு உனக்கு போ சாரல்ம்மா இனி நான் வேறத மாத்தினும் என சலித்துக்கொண்டவன் அவளை சிறுது நேரம் நிம்மதியா விடுவோம் என எண்ணி போய் விட்டான்......



உறவுகளும் வி ஐ பி க்களும் கூடிருக்க மங்கள நாதங்கள் இசைக்க அக்னியை சாட்சியாய் வைத்து சாரலின் சங்கு கழுத்தில் மங்கள நானைப்பூட்டி தனது இன்னுயிர் மனைவியாய் ஆக்கி கொண்டான் விஜய்......


Part – 26


விஜய்யின் ஹோட்டலில் தான் வரவேற்ப்பு நடந்தது.தொழில் நண்பர்கள்,அரசியல் பிரமுகர்கள்,உறவுகள் என ஹோட்டல் நிரம்பி வழிந்தது...



அவனது பள்ளி,கல்லூரி,அவனுடன் வெளி நாட்டில் படித்த நண்பர்கள் என நிறைய பேர் வந்துருந்தனர்.அவர்கள் அனைவரும் விஷ் பண்ணும் போது இதை தான் சொண்ணார்கள்,உனக்கு செம மேட்ச்,எங்க இருந்துடா இந்த அழகியை பிடிச்ச,உண்மையில உன் ஒய்ப் பயங்கர அழகு.அதில் ஒருவனோ ஏண்டா எவ்வளவு பொண்ணுங்க உன் பின்னாடி சுத்துனாங்க எல்லாரையும் கலட்டி விட்டதற்க்கு காரணம் இப்படி ஒரு பொண்ணு உனக்காக வெயிட் பண்ணாறாங்கன்னு தானோ ஏன் விஜய் நான் சொல்றது சரியா.....



இன்னொருவனோ"டேய் அங்க அவளுக அறை குறையா சுத்தினாக்கூட நம்மள மயக்கிட முடியாது ஆனா நம்ம ஊர் பொண்ணுங்க அடக்க ஒடுக்கம்மா சேலையை கட்டி அவங்க இடுப்புல்ல தெரியுர அந்த சந்தன நிற சின்ன பார்ட் போதும் நம்மல கவுக்க எத்தனை மணி நேரம்மோ எவ்வளவு தடவையோ பார்க்க சகிக்கவ்வே சகிக்காது"பார் இந்த மனோஜ் கூட அதை தான் பண்ணிட்டு இருக்கான் என்றதும் அந்த மனோஜ் அலறினான்."டேய் சிஸ்டரை வச்சிக்கிட்டு என்னடா பேசிறிங்க எனவும் மற்றவர்கள்"நீ ரொம்ப நல்லவன் தான் எங்களுக்கு தெரியுது என கலாய்க்க அங்கு பெரும் கலகலப்பு.....




ஆனாலும் விஜய் நீ பார்த்த முதல் பொண்ணயே கல்யாணம் வரை கொண்டாத்துட்ட என சொண்ணதை கேட்ட சாரலுக்கு காதில் தேன் வந்து தான் பாய்ந்தது.ஆனால் காட்டிக்க வில்லை......



"என்னை இந்த கல்யாணம் வரை எப்படி கொண்டு வந்தான்னு எனக்கு தானே தெரியும்".என மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது....



சிறுது நேரத்தில் விருந்து நடந்தது.ஹாஸ்பெட்டலில் இருப்பவர்களுக்கு சாப்பாடு அங்கயே கொடுத்தனுப்பட்டது.அவர்கள் குடும்பங்களுக்கு விஜய்யே வந்து பறிமாறினான்.சாரலும் அவனது எண்ணம் அறிந்து அவனுடனான எல்லா விஷயத்திலும் ஒத்துழைத்தாள்.அவர்களின் பிள்ளைகளுடன் போட்டோ எடுத்து கொண்டான்.அத்தனை 

விஜபிக்களுடன் அவன் இருந்த நேரம் சிறுது தான் இவர்களுடன் தான் செலவிட்டான் அதிக நேரத்தை.. 



சதிஷ்ஷின் பேரண்ஸ் வந்துருக்க அவர்களின் கால் தொட்டு வணங்கினர் புது மண தம்பதியர்.....



சதிஷின் அம்மா வாணி"உன் கல்யாணத்தை பார்த்தாச்சு இவனுக்கும் கல்யாணத்தை பண்ணி பார்த்துட்டா நிம்மதியா இருக்கும்.....


அவன் தான் சொல்லிட்டானே காவ்யாவிக்கு மேரேஜ் ஆனா தான்னு இனி அவன் முடிவை மாத்தமுடியாது.உங்களுக்கு பேரம் பேத்தியை பாக்கனும் அவ்ளோ தானேநானும் சாரலும் பெத்து தர்றோம் என கூச்சம் இல்லாமல் சொல்ல பெண்ணாகி போனவளுக்கு தான் கூச்சமாகி போனது.இருந்தும் அதை மறைத்து புன்னகை சிந்தினாள்.....


திருமணம் முடிய விஜய்யின் வீட்டுக்கு வர வீட்டை பார்த்து பிரமித்து விட்டாள்.அவ்வளவு பெரிய கோட்டை மாதிரி இருந்தது.பிறகு பூஜை அறையில் தெய்வங்களை வணங்கி விளக்கை ஏற்ற சொண்ணார் மிதுலா.அதன் படி விளக்கை ஏற்றியவளை விஜய்யின் அறையில் விட்டனர்..



அவனது அறையை பார்த்து இன்னும் பிரம்மித்து விட்டாள்.அதனுள்ளயே ஹால் பெட்ரும் ஆபிஸ் ரும் ,டிரஸ்ஸிங் ரும்,அவனது உடற்பயிற்ச்சி அறை என அவர்களது வீட்டை விட பெரியதாக இருந்தது."இவ்ளோ பெரிய பணக்காரன் ஏன் என் பின்னாடி கிறுக்கு பிடிச்சு சுத்துனான்னு ஒன்னும் புரியல."மறுபடியும் குளித்து முடித்து விட்டு வந்தவளிடம் மறுபடியும் மேக்கப் போட வந்த ப்யூட்டி பார்லர் ஆட்களை வேணாம் என சொல்லி அவளே எளிமையாக அலங்கரிந்து கொண்டாள்.




தலை முடியை தளர பின்னி அதில் மிதுலா கொடுத்தனுப்பிய மல்லிகையை வைத்து கொண்டாள்.மிதமான வெயிட் கொண்ட காஞ்சி பட்டை உடுத்தி கொண்டவள் தனது நெற்றி வகுட்டில் குங்குமத்தை இட்டுக்கொண்டாள் அப்பொழுது விஜய்யின் ஞாபகம் வராமல் இல்லை."இன்னும்மா போன் பேசுறான் என நினைத்தவள் கீழே இறங்கி மிதுலாவை பார்க்க போனாள் ஹாலில் பேசிக்கொண்டுருந்தனர் மிதுலாவும் கணேஷூம் "அவளை கண்ட மிதுலா உண்மையில் அசந்து தான் போனார்."இவதான் எம்புட்டு அழகா இருக்கா அதான் விஜய் இவளை விடாமல் தொறத்தி இருக்கான் போல என எண்ணியவர் அவளை அழைக்க.....



அவள் இருவரின் காலிலும் விழுந்து ஆசிர் வாதம் வாங்கினாள்.அவளை ஆசிர் வதிக்க"மிதுலா ரொம்ப அழகா இருக்கே சாரல் எனவும் அழகாய் சிரித்தாள்.....



இன்னும் உங்க பய்யனை காணம்மே அத்தை...



அவன் வெளிய போன் தான் பேசுறான்.நீ உன் ரும்க்கு போ அவனை அனுப்பி விட்றேன் எனவும் சரி என்றாள்.கல்யாண அலைச்சல் உடலை வாட்டியது......



சிறுது நேரம் அமர்ந்துருந்தவளுக்கு தூக்கம் கண்ண கட்டியது..இன்றைய இரவுக்கான எந்த எதிர்பார்ப்பும் இல்லை.ஆனால் விஜய்யின் எதிர்பார்ப்பை அவள் கொடுக்காமலும் இருக்க போவதில்லை.ஆனால் அது விஜய்யின் எண்ணத்தை பொறுத்தது ......




கண்கள் சொருக தூங்க போகும் வேளையில் "கதவை திறக்கும் சத்தம் கேட்க்க பட்டென்ன எழுந்து நிற்க்க அதை பார்த்தவன் மெலிதாய் சிரித்தான்.அவள் அவனை பார்த்து முழித்து கொண்டு நிற்க்க "அவன் அவளை கண்களால் விழுங்கி கொண்டுருந்தான்.மணப்பெண் அழங்காரத்தில் கூட அவள் இப்படி இவ்வளவு அழகாய் இல்லை.ஆனால் இப்ப இருப்பதற்க்கான காரணத்தை ஆராய்ந்தான்....



மெலிதான பட்டு அதை அவளுக்காக அவனே பார்த்து பார்த்து எடுத்தது.அது தான் அவளுக்கு அழகு சேர்க்குதோ...இல்லை நான் வச்சு விட்ட அந்த குங்கும்மமா,இல்ல நான் அவளது காலில் மாட்டிய மெட்டியா இல்லை நான் கழுத்தில் பூட்டிய தாலி சரடா எதுவோ ஆனால் ஒன்றும் மட்டும் புரிந்தது...இவளிடம் வந்தது நால தான் இவை அழகாய் தெரிகிறது என நினைத்தவனின் உணர்வ்வுகள் கட்டு பாட்டை மீறின ,அவளை அங்க அங்கமாய் பார்க்க துடித்த கண்னையும்,அவனுக்கு மட்டும்மே சொந்தமான பூங்கொடி மேனியை தளுவ துடித்த கைகளை கட்டுப்படித்தியவன் அவளிடம் இயல் பாக "தூக்கம் வந்தா தூங்கு சாரல் என்றான்....



அவ்வளவு தான் ஒரு நொடியில் கண்களை மூடி தூங்கி விட்டாள்.சிறுது நேரத்திலையே ஆழ்ந்த உறக்கம் அவளை தழுவ அவளையே சிறுது பார்த்துருந்தவன் அவளருகில் வந்தான்.....



இம்புட்டு அழகா இருக்கேயடி இப்படியல்லாம் நீ என் பக்கத்துல்ல இருந்தா என்னை கண்ரோல் பண்ணிக்கவ்வே முடியாது.அதனால்ல முடிந்த அளவு தள்ளியே இரு சரியா என்றவனின் எண்ணம் இதுதான்"ஒரு நொடி போதும் இவளை தன்னுடையவளாக ஆக்கி கொள்ள ஆனால் இதை செய்ய விஜய்க்கு ஏனோ மனம் வரவில்லை.அவள் மிதான தன்னுடனான முத்தம் சண்டை எல்லாம் தன்னை மீறிய உணர்வ்வுகளால் வெளிப்பட்டு விடுகிறது.ஆனால் அடுத்த கட்டதிற்க்கான செயல் தங்கள் உடல்கள் வேறாய் இருந்தாலும் தங்களது உணர்வ்வுகளையும் உயிர்களையும் இணைக்க போகும் பாலம் அது.அதனால் அது இருவருடைய சம்மதத்துடனுன் நடக்க வேணும்.அதுவும்மில்லாமல் தன் மீதான அவளது எண்ணம் முழுதாய் மாற வேண்டும் என நினைத்தான்.....



இப்படியே உன்னை பக்கத்தில்ல வச்சுக்கிட்டு என்னை கண்ரோல் பண்ணிக்க முடியாது.அதனால்ல சீக்கிரம் என்னை புருஞ்சுக்க ட்ரைப்பண்ணு ,எனக்கும் உன்ன மாதிரி பேபிங்க பிறக்கனும் என ஆசை இருக்காதா.என்னை முழுசா புருஞ்சு ஏத்துக்கிட்டா அதற்கான வேலையை பார்ப்பேன் என சிரித்தவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான்....



ஆனா என்னோட முதல் ஆசை நிறை வேறிடுச்சு என்ன தெரியும்மா உன்னை என் பக்கதில்லையே வச்சுக்க நினைச்சது.இப்படியே உன்னை பார்த்துட்டே உயிர் போனாலும் பராவாயில்லையின்னு தோனுது.இரண்டாவது ஆசை அதை சொல்ல முடியல்ல.ஆனா காத்திருப்பேன்......


உன் முகத்தை பார்க்கவ்வே


என் விழிகள் வாழுதே....


பிரியும் நேரத்தில் பார்வ்வை....


இழக்கிறேன் நானடி....ஈஈஈ


உடல் பொருள் ஆவி அனைத்தும்.....


உனக்கெனவ்வே தருவேன் பெண்னே...


உன்னறிகில் வாழ்ந்தாள் போதும்.....


கண்ணே..கண்ணே...

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.