அவன் இரு கரங்களின் இடையில் வாகாகப் பொருந்தியபடியே தனக்குள் ஏற்பட்டு கொண்டு இருக்கும் மாற்றத்தை உணர்ந்தாள்.. அவன் காமத்தோடு அணைக்கவில்லை தான்.. ஆனால் ஏன் என் மனம் இப்படி தடுமாறுகிறது.. இதுவரை ஆண்களிடம் திட்டுவதற்கு மட்டுமே வாயைத் திறந்த நான் இவனிடம் மட்டும் எப்படி இவ்வளவு இயல்பாக பேசுகிறேன்.. என அவள் நெளிந்துக் கொண்டே யோசிக்க அவள் நிலையை தெளிவாக புரிந்து கொண்டான் அவன்...
" ஓய் மந்தி நான் என்ன உன்னை அந்தளவுக்கா நெறிக்கிறேன்.. எதுக்கு டி இப்படி நெளியுற?"
" அது இல்லை கடுவா.. நான் இதுவரை பசங்களோட பேசுனதே இல்லையா.. எல்லா பசங்களும் என்னை பார்த்தாலே பயத்துல ஒரு அடி தள்ளி தான் நிற்பாங்க.. உண்மையை சொல்லணும்னா இதுவரை ஒரு ஆணோட ஸ்பரிசம் என் மேலே பட்டது இல்லை.. உன் கை காமத்தோட என் மேலே படல தான் பட் என் மனசுக்குள்ளே வேறே ஒரு உணர்வு தோணுது.. நீ உண்மையா இருக்கிற, ஆனால் நான் உண்மையா இல்லையே அப்படினு ஒரு ஃபீல் வருது.."
என சொல்ல மென்மையாக சிரித்தவன் அவள் கையைப் பிடித்து இழுத்து அவளை தன் மேல் அமர்த்திக் கொண்டான்..
" ஓய் என்ன பண்ற கடுவா... " என அவள் கேட்க அவள் உதடுகளில் கை வைத்து பேசாத படி செய்து " கொஞ்ச நேரம் இப்படியே உட்காரு" என்றான்.. முதலில் அவளது இதயக்குதிரை ரேஸ்ஸில் ஓட ஆரம்பிக்க பின் அதுவே இரண்டு நிமிடங்களில் சோர்ந்து போய் தனது ஓட்டத்தை நிறுத்தி நிதானம் ஆகியது..
அவளது கண்ணத்தை வருடியபடி இப்போ அந்த பதற்றம் இருக்கா என கேட்க அவள் இல்லையென தலையசைத்தாள்.. "சோ இனி நீ கில்டியா ஃபீல் பண்ண மாட்டே.. உனக்குள்ளே அந்த உணர்வு வராது.. முதல் தடவை தெரியாம கைப்படும் போது நம்ம மனசு இப்படி தான் தவிக்கும்.. அப்புறம் அதுல எந்த தப்பான எண்ணம் இல்லைனு மனசுக்கு புரியும் போது அதை இயல்பா எடுத்துக்கும்.. ஒரு அண்ணணோ நண்பணோ இருந்தா இந்த உணர்வு முன்னாடியே ஏற்பட்டு அதை புரிஞ்சுக்கிட்டு இருப்ப.. உனக்கு அந்த வாய்ப்பு இல்லைல.. அதனாலே தான் இதை உணர முடியல.. சோ இந்த நண்பனோட தொடுதல் உனக்குள்ளே வேற மாறுதல்களை உண்டு பண்ணாது இல்லையா?.. " என கேட்க அவள் ஆச்சர்யமாக அவனைப் பார்த்தபடி தலையை இடம் வலம் அசைத்தாள்..
" என்ன மேடம் இப்படி கண்ணு வெளியில வந்து விழறா மாதிரி பார்க்குறீங்க.. போ போய் சீக்கிரமா தூங்கு.. அப்போ தான் காலையில எழுந்துக்க முடியும்" என சொல்ல அவளும் தலையாட்டியபடி படுக்க சென்றாள்..
அடுத்த நாள் காலை அவள் வெளியே வரும் போது அவள் கால்களுக்கு இடையே கரப்பான்பூச்சி ஓட அதைப் பார்த்து கத்தாமல் அதன் பின்னாலே ஓடியவள் லாவகமாக அதன் இரண்டு நீண்டு வளர்ந்த முடிகளைப் பிடித்து வெளியே கொண்டு போய் விட்டு " இனி வீட்டுக்குள்ளேலாம் வரக்கூடாது இங்கேயே இரு உனக்கு சாப்பாடு நான் டெய்லி போடுறேன்.. உன் பேரு இனி செல்லா.. பேரு ஓ.கே தானே.. "என்ற படி ஒரு கண்ணாடி பெட்டியில் செல்லாவை அடைத்து வைத்து திரும்ப அர்ஜீனின் மீது மோதிக் கொண்டாள்..
" அந்த கரப்பான்பூச்சி பாவம்.. உன் மூஞ்சை கிட்டே பார்த்து பயந்து போய் இருக்கும்.. அதுக்கு அது உன் காலாலேயே மிதிப்பட்டே செத்து இருக்கலாம்" என அர்ஜீன் கரப்பான்பூச்சிக்காக வக்காலத்து வாங்கிக் கொண்டு வர, "யூ கடுவா " என அவனைத் துரத்தியபடியே ஓடினாள் அவள்....
அன்று மாலை வீட்டிற்கு இவள் சீக்கிரமாக வந்துவிட வீடு முழுக்க அர்ஜீனைக் காணாமல் தேடினாள்.. என்ன இவன் எப்பவும் நாம வரதுக்கு முன்னாடியே வீட்டுக்கு வந்துடுவானே.. எங்கே போய் இருப்பான் என வெளிப் பக்கமாகப் பார்க்க அவன் மொட்டைமாடியின் மேலே ஏதோ ஒரு கம்பியில் ஏறி நின்று கொண்டு இருந்தான்..
" அர்ஜீன் நீ குரங்குனு நான் நம்புறேன்.. அதுக்காக மேலே தொங்கி தான் ப்ரூவ் பண்ணனும்னு அவசியம் இல்லை" என சொல்ல " மவளே கீழே வந்தேன்.. நீ செத்த.. ஒழுங்கா ஓடிப் போயிரு... " என்றான்..
" ஆமாம் மேலே ஏறி என்ன பண்ணிட்டு இருக்க"
" ஹ்ம்ம்ம் வாழ்க்கையை வேற கோணத்துல இருந்து பார்க்குறேன்.. "
" அர்ஜீ்ன்ன்ன்ன்ன்"
" சரி கோவப்படாத.. மொக்கை போடல...
செட்டாப் பாக்ஸ் செட்டப் பண்ணிட்டு இருக்கேன்டி.. இரு இரண்டு நிமிஷம் தான் கீழே வந்துடுவேன்" என்றான்.. அவன் வேலையை முடித்துவிட்டு உள்ளே வந்து டிவியைப் போட அது காட்சிகளைக் காண்பித்தது.. அதைப் பார்த்தவன் சாய்ந்தபடி சோபிவில் விழ இவள் உள்ளே சென்று காப்பி போட்டு வந்து கொடுத்தாள்... அவன் ஆச்சர்யமாகப் பார்த்தபடி " ஓய் மந்தி நம்பி குடிக்கலாம் தானே. "
" டவுட்டு தான்.. யூ டியூப் பார்த்து தான் போட்டேன்.. நீ குடிச்சுட்டு சொல்லு.. நான் அப்புறமா குடிக்கிறேன்" என சொல்ல அவன் வேண்டுமென்றே அவள் வாயை இருக்கையாலும் பிடித்து காப்பியை ஊற்றினான்.. முதலில் அபூர்வ சகோதரர்கள் படத்தில் ஸ்ரீவித்யா எப்படி குடிப்பாளோ அப்படியே குடித்தவள் இரண்டு மூன்று மிடறில் ரசித்துக் குடிக்க ஆரம்பித்தாள்.. அதைக் கண்டவன் உடனே மீதி காப்பியை குடித்துவிட்டான் பரவாயில்லை நல்லா தான் போட்டு இருக்கே மந்தி" என்றான் பாராட்டும் விதமாய்... அவள் இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொண்டாள்..
அதன் பிறகு வந்த நான்கு நாட்கள் சண்டையும் சமாதானமுமாக கடந்து போய் வார விடுமுறை தினமும் வந்தது.. காலையில் லேட்டாக எழுந்து அறையை விட்டு வெளியே வந்தவள் சமையலறையில் அர்ஜீனைக் கண்டவுடன் " ரொம்ப பொறுப்பு பையா கடுவா நீ.. " என பின்னாடி சென்று அவளது தோளில் தட்ட சிரித்தபடி அவளுக்கு காப்பியைக் கொடுத்தான்..
அதைப் பருகியவாறே " ஓய் அர்ஜீன்.. என் ஆபிஸ் ப்ரெண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து வெளியே அவுட்டிங்க் போகப் போறோம்.. "என சொல்ல ம் ஓகே மந்தி.. " என்றான்..
(அவளும் அவனிடம் பர்மிஷன் கேட்பது போல் கேட்கவில்லை... அவனும் சென்று வா என அனுமதி அளிப்பது போல் சொல்லவில்லை.. இயல்பாக எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்தது இவர்களது நேசம்... ஒருவரது வாழ்க்கை வட்டத்திற்குள் நுழைந்து அதன் விட்ட ஆரங்களை மாற்றாமல் அதில் தன்னை சதுரமாய் பொருத்திக் கொண்டார்கள்.. )
அவள் அர்ஜீனைப் பார்த்து " ஆனால் நீ தனியா இருப்பியே கடுவா.. நீயும் உன் ப்ரெண்ட்ஸ் கூட எங்கேயாவது போயிட்டு வா.. இல்லை என் கூடவே வா.."
" இல்லை தியா.. எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்லாம் யாரும் இல்லை அசோக்கை தவிர.. நான் இருந்துப்பேன்.. நீ கவலைப்படாம போ.." என சொல்ல அவளும் சரியென்று தலையாட்டிய நொடி போன் அடித்தது.. போனில் சில நிமிடங்கள் கீர்த்தியிடம் பேசிவிட்டு அர்ஜீனிடம் திரும்பியவள் " கடுவா.. ஈவினிங் கீர்த்தி வீட்டுல பார்ட்டி அரேஜ் பண்ணி இருக்காங்கலாம்.. உன்னையும் என்னையும் சேர்த்து இன்வைட் பண்ணா.. நான் ப்ரெண்ட்ஸோட போயிட்டு நாலு மணிக்கு வீட்டுக்கு வந்துடறேன்.. நாம ரெண்டு பேரும் அப்படியே கிளம்பி போலாம்" என சொல்ல அவன் சரியென தலையாட்டினான்..
இவள் நான்கு மணிக்கு வீட்டிற்கு வர அர்ஜுனும் கிளம்பி தயாராக இருந்தான்.. அவனையே இவள் ஆவெனப் பார்க்க " ஓய் சைட் அடிச்சது போதும்.. கிளம்பலாம் வா.. "
" ஆமாம் இவரு பெரிய சாம் ஆண்டர்சன்.. இவரையே சைட் அடிக்க.. நானாவது உன்னை பார்க்குறேனு சந்தோஷப்படு.."
" ஏன் டி உனக்கு எக்ஸாம்பிள் சொல்ல வேற ஆளே கிடைக்கலயா.. ஐயாவை எத்தனை கேர்ள்ஸ் சைட் அடிப்பாங்க தெரியுமா?" என காலரை தூக்கிவிட்டபடி சொல்ல "தெரியுமே" என சொல்லியவள் காற்றிலேயே பூஜ்ஜியத்தை வரைந்து காண்பித்தாள்..
" மேடம் என் பவர் தெரியாமா பேசுறீங்க.. கீர்த்தி வீட்டுக்கு போவோம்ல அங்கே தெரிஞ்சுப்ப இந்த அர்ஜீன் யாருனு " என சொல்லியவன் வெளியே சென்று காரை எடுத்துக் கொண்டு வந்து நிறுத்தினான்..
" என்ன கடுவா கார்லாம் வெச்சு இருக்க.. இதுவரை என் கிட்டே சொன்னதே இல்லை காமிச்சதும் இல்லை.. ஆமாம் நீ வேலைக்கும் போறது இல்லை... ஆனால் எப்படி இப்படி இவ்வளவு பெரிய வீடு கார் பணம்லாம்" என்று தன் சந்தேகத்தை கேட்டபடி முன் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டாள்..
" அதெல்லாம் ரகசியம் மேடம் சொல்றதுக்கு இல்லை... "
" ரகசியத்தை நீயே பத்திரமா பூட்டி வெச்சுக்கோ..." என சொல்லிவிட்டு அவள் கோபமாய் திரும்பிக் கொண்டாள்...
" ஓய் என்ன தியா கோவமா ? "
" இல்லை இல்லை... ஆமாம்.. அதான் கார் வெச்சு இருக்க இல்லை... அப்புறம் ஏன் பைக்லயும் சில சமயம் பஸ்லயும் போற"
" எனக்கு பஸ்ல வர தான் பிடிக்கும் தியா... வித்தியாசாமன மனிதர்கள் நிறையப் பேரை பார்க்கலாம்.. இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்.. அதை விட்டுட்டு நாலு கண்ணாடிக்குள்ளே அடைஞ்சு போற சொகுசு வாழ்க்கை எனக்கு பிடிக்காது" என்றான்..
" இன்ட்ரஸ்டிங்கா இருக்க கடுவா நீ.. நல்லவேளை நீ என் லிவ் இன் பார்ட்னரா ஆன.. இல்லாட்டி இப்படி ஒரு கேரக்டர் உள்ளே personஐ என் லைப்ல மிஸ் பண்ணி இருப்பேன்"
" நானும் தான் தியா" என அவள் கையை மிருதுவாகத் தொட்டான்.. ஆனால் இந்த தொடுதல் வெறும் நட்புக்கான பிரதிபலிப்பு என்பதை இரு உள்ளங்களும் ஏற்கவில்லை.. அவனுக்குள்ளும் ஒரு வித அவளுக்குள்ளும் ஒரு வித சிலிர்ப்பு.. அதன் பிறகு மௌனமே மொழியாக அந்த பயணம் தொடர்ந்து, கீர்த்தியின் வீட்டில் முடிவிற்கு வந்தது...
No comments:
Post a Comment