விஜய் மறுபடியும் இரவு வந்தான். டாக்டரிடம்
அவர்களை பற்றி கேட்டான்."இப்போ எல்லாரும் ஓகே தானே டாக்டர்.....
ம்ம் விஜய் இப்ப எல்லாரும் நார்மலா ஆயிட்டாங்க ரெண்டு பேர் ஐ சீ யூ வீல் இருந்தாங்க இப்போ அவங்களும் நார்மல் எனவும் தான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.அப்பொழுது சாரலும் அங்கு தான் இருந்தாள்.அவன் முகம் நிம்மதியை காட்ட அதைப்பார்த்தவள்....
எல்லாருக்கும் எதுவும் ஆயிடக்கூடாதுன்னு நினைக்கிற அளவு நல்லவன் ஆனா எனக்கு மட்டும் கெட்டவன் இவன் மட்டும் என்னை அப்படி மிரட்டாமல் இருந்துருந்தா எவ்ளோ நல்லாயிருந்துருக்கும்.அப்பொழுது கூட அவனின் எண்ணத்தை உணர மறுத்தது மனசு."இப்போ அவன் மேல இருந்த காதல் கசப்பா மாறிருக்காது.அந்த கசப்பும் சாமாணியத்தில் தன்னை விட்டு போகாது.என நினைத்தவள் அவனை பார்த்தபடி பெரும் மூச்சை வெளியிட்டாள்.....
டாக்டரிடம் பேசிக்கொண்டுருந்தாலும் அவளை பக்கத்தில் வைத்துக்கொண்டு அவளை அவன் கவனிக்காமல் இருந்தாள் தான் எட்டாவது அதிசயம்.பேச்சு பேச்சாக இருந்தாலும் அவளை ஓரம்மாய் கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.அவளது முக பாவணைகள் சொண்ண சேதியும் அவளின் பெரும் மூச்சும் அவள் தன்னைத்தான் திட்டித்தீர்க்கிறாள் என்பது நன்கு தெரிந்தது.என்னை திட்டாமல் இவளால இருக்கவ்வே முடியாது போல என்றவனின் இதழில் மெலிதான புன்னகை.....
அப்பொழுது டாக்டருக்கு போன் வர அதை குனிந்து பார்க்கும் வேளையில் அவளை பார்த்து கண்ணடித்தவன் ஒரு குறும்பு புன்னகையுடன் டாக்டரிடம் இயல்பாக பேச ஆரம்பித்து விட்டான்.அவன் செயலில் ஓரு நொடி திகைத்தவள்"இதை சார் பார்த்துருந்தாள்....
இவன் அட்டகாசம் தாங்க முடியல சாமி இவன் அடங்கவும் மாட்டான் திருந்தவும் மாட்டான்....
என நினைத்தவள் முகத்தை வெட்டி திரும்பி கொண்டாள்...
அப்பறம் டாக்டர் எனக்கு டூ வீக்ஸ்ல கல்யாணம்.இத்தனை உசுர காப்பாத்தின உங்கள்ட்ட முதல்ல சொல்றது தான் முறையின்னு தோனுச்சு.நீங்க கண்டிப்பா வரனும்......
அதை கேட்டவளுக்கு அவன் மேல் மரியாதை வராமல் இல்லை.ஆனா இப்போ சார் பொண்ணு யார்ன்னு கேட்டா என்ன சொல்வான்.நான் தான்னு சொல்வான்னா ம்க்கும் இவனாவது சொல்றாதாவது நான் இந்த வேலையில இருக்கிறதே எனக்கு கெளரவ்வம்மா இருக்காதுன்னு சொண்ணான்.இவன் தான் என்னை இப்போ அப்படி சொல்லப்போறான் என அவள் மனதில் புலம்பி கொண்டுருந்த வேளையில்.....
"என்னை மேரேஜ் பண்ண போறப்பொண்ணு வேற யாரும் இல்லை இவங்க தான் சாரல்"என அவன் கை நீட்ட இப்போ சாரல் மட்டும் இல்லை.டாக்டர் கூட ஒரு நொடி அதிர்ந்து ஆச்சிர்யம்மாய் பார்த்தார் சாரலை...
இங்க வா சாரல் என அவளை கண்களால் விழுங்கியப்படி அவன் அழைக்க அதில் கட்டுட்ட சாரல் அவன் அருகில் வந்து நின்றாள்...
இருவரையும் பார்த்து புன்னகைத்த டாக்டர் வாழ்த்துக்கள் என்றார்.இருவரும் புன்னகையுடன் ஏற்றுக்கொண்டனர்.....
ஆனா சாரல் இதை நீ சொல்லவ்வே இல்லையம்மா என கேட்க்க பதில் சொல்ல முடியாமல் "என் நிலமையில் எங்க சொல்ல என நினைத்தவள்."மேரேஜ்ர்க்கு உங்களை இன்வெய்ட் பண்ணனும் இருந்தேன் என சமாளித்தாள்....
விஜய்யின் இந்த செயலை எதிர்பார்க்காத சாரல் அவனை தான் பார்த்திருந்தாள்.அவன் இருப்பது கோபுரம் எதிரே நிற்பவர் அவன் நிலையில் இல்லாவிட்டிலும் அவரும் சமுகத்தில் உயர்ந்து இருப்பவர்.அவரிடம் வேலை பார்க்கும் தன்னை அவரிடம்மே தன்னை தனது மனைவியாக போகிறவள் என்று இவ்வளவு இயல்பாக சொல்லி விட்டான்.அது அவன் சொண்ண விதம்மே பெருமையியுடன் சொல்லி தன்னை கை காட்டியது நினைவு வர உள்ளம் சிலிர்த்து போனது.அன்று உன் வேலை எனக்கு கெளரவ்வமாய் இருக்காது என சொண்ணானே தவிர மட்டம் தட்டி பேசவில்லை.அவன் நிலையில் யார் இருந்தாலும் அதை தான் சொல்லிருப்பர்....
ஆனா ஒன்றும் மட்டும் புரிந்தது.என்னை எந்த நிலையிலும் இருந்தாலும் விட்டுருக்க மாட்டான் என்பதை ஆனால் எப்பொழுதும் போல இருவருக்கும் இடையேயான ஒரு சிறு கண்ணாடி திரை அவளை இயல்பாக்க விடாமல் தடுத்தது..
பிறகு சாரல் கிளம்பும் நேரம் வர கிளம்பினாள்.விஜய் சிறுது நேரம் பேசி விட்டு அவனும் கிளம்பினான்....
அவள் தன் பேக்கை எடுத்து கொண்டு கிளம்பும் வேளையில் அவன் பின்னே வருவதை பார்த்தவள் வேகவேகமாக நடந்தாள் இன்னைக்கு இவனிடம் மாட்டிரக்கூடாது என எண்ணியப்படி வேகம்மாய் நடந்தவளை பார்த்த விஜய்க்கு சிரிப்பு வந்தது.....
எப்ப பார் இவளுக்கு என்னிட்ட இருந்து தப்பிக்கறதே வேளை அப்பறம் என்னிடம்மே வந்து சிக்குவா என ஒரு ப்ளான்னை போட்டான்.."சாரல் போன்ல அம்மா உன்னிட்டபேசனும்மா என கத்த அவனை தவிர்க்க முடிந்தவளால் மிதுலா என்ற பெயரைக் கேட்டதும் தவிர்க்க முடியவில்லை.வெகு சில நேரம்மே சத்தித்து பேசிருந்தாலும் அவர் காட்டிய அன்பு பெற்றவளுக்கு நிகரானது அதனால்லயே நின்றாள்.....
அவன் அருகில் வந்து நின்றவன் மிதுலாவிடம் பேசுவதை போலவே பாவ்லா செய்தான்.இப்ப தான் பார்த்தேன்ம்மா சிறுது நேரம் ம்ம் கொட்டினான்.சரிம்மா உங்க மருமகளை நடக்க விட மாட்டேன் நான் காரிலையே விட்டுறேன் என்று அப்படி நிஜத்தில் பேசுவதை போலவ்வே பேச அதை நம்பிய சாரல்....
கொடுங்க நான் பேசுறேன் என்றவளிடம் ."ம்ம் தரேன் என்றவன் அவளிடம் கொடுக்கும் வேளையில்"போன் கட்டாயிருச்சு சாரல் எனவும் அவள் முகம் மிதுலாவிடம் பேசமுடியவில்லை என்றதும் வெகுவாய் வாடி விட்டது.அதன் பார்த்தவன் முகம் கனிய"எதாவது பிசியா இருப்பாங்க பேசுவாங்க வா நம்ம போலாம் என.....
நான் வரலை பஸ்ல போயிக்கிறேன் என்றவளிடம்"என்ன சாரல் இப்படி சொல்ற அம்மா என்ன சொண்ணாங்க என் மருமகளை பத்திரம்மா வீட்டுல்ல விடுன்னு சொண்ணாங்க சரி பராவாயில்லை நான் அவங்ககிட்ட சொல்லிக்கிறேன் என முகத்தில் கவலை வர வழைத்து கொள்ள.....
சரி வரேன் ஆனா இது அத்தைக்காக தான் என்றாள்.ஓகே என்றான்.....
அப்பறம் இன்னொரு கன்டிஷன் என்றாள் அவனை பார்த்து.....
அவளை ஒரு மாதிரி பார்த்தவன் "சொல்லு என்றான்....
கார்ல்ல நான் பின் சீட்டில் தான் உட்காருவேன் என அவள் முகத்தை உற்றென்று வைத்து கொண்டு சொல்ல அவள் சொல்வதின் அர்த்தம் புரிய விஜய் வாய் விட்டு சிரித்தான்...
Part – 24
இரவு நேரம் இதம்மான காற்று மனதுக்கினியவளின் அருகாமை என விஜய்
என்றுமில்லாமல் உற்சாசம்மாய் இருந்தான்..
சாரல் பின் சீட்டில் அமர்ந்து கண்ணாடி வழியாக வந்த குளிர்ந்த காற்றை சுகம்மாய் சுவாசித்து கொண்டுருந்தாள்....
அதை முகப்பு கண்ணாடி வழியாக பார்த்து ரசித்து கொண்டுருந்தான் விஜய்..அவளிடம் எதாவது வம்பு பண்ணனும்மே என நினைத்தவன் அவளிடம் பேச நினைக்கும் பொழுது சரியாக போன் பண்ணினார் மிதுலா"அம்மா சரியான டைம் போன் பண்ணிருக்கிங்க இப்ப கோபம் வரும் பார் அம்மணிக்கு என்றவன் அட்டன் செய்தவன் '"சொல்லுங்க அம்மா "எதிர் புறம்....
என்னடா பண்ற நல்லாருக்கியா....
ம்ம்....
நல்லாருக்கேன் என சொண்ண அவளிடம் மாட்டிக்கொள்வானே இப்ப தான் பேசினான் மறுபடியும் நல்லாருக்கேன் என சொல்றான் என நினைப்பாளே அதனால் எடுத்த எடுப்பிலையே"அம்மா சாரல் என் பக்கதில்ல தான் இருக்கா பேசுறிங்களா....
ம்ம் கொடுடா....என்றார்....
போனை அவளிடம் கொடுத்தான்"அத்தை எப்படி இருக்கிங்க....
நான் நல்லா இருக்கேன் சாரல் நீ எப்படி இருக்க .....
ம்ம் நல்லா இருக்கேன் அத்தை "முன்னே நீங்க பேசினப்போது பேச வந்தேன் அதுக்குள்ள கட்டாயிடுச்சு அத்தை....
கேட்டுட்டா இனி தீபாவளி தான்....
என்ன சொல்ற சாரல் நான் இப்பதானே போன் பண்றேன் எனவும்.....
அப்போ நீங்க போன் பண்ணி உங்க பய்யன் கிட்ட பேசலையா நீங்க....
இல்லம்மா நான் இப்பதான் போன் பண்னேன் என அவர் சொல்ல "அவனை முறைத்தாள் எப்படி என்ன ஏமாத்தி அவனோட வரவச்சுட்டான் என பார்க்க அதை கண்டவனின் இதழ்கள் எப்பொழுதும் போல குறும்பாய் புன்னகைக்க"அவளோ அத்தை நானே அப்பறம் கூப்பிட்றேன் என்றாள் முகம் சிவந்தவளாய்..
என்ன சாரல் மா கோபம் வருதா என கேட்க்க...
அவனைப்பார்க்க பார்க்க கோபம் வந்தது.அவனரிகே சென்றவள் அவனது முடியை கொத்தாய் பிடித்து ஆட்டி வைத்தாள்.அடித்த நொடி காரை நிப்பாட்டியவன்"ஐய்யோ வாங்க யாரவது காப்பாதுங்க என்னை ஒருத்தி கொலை பண்ண போறா என கத்த.....
ஆமா இன்னைக்கு கொலை தான் பண்ண போறேன்.எதுக்கு பொய் சொண்ணிங்க ஏ பொய் சொண்ணிங்க என அவன் தலை முடியை பிய்தெடுக்க.....
அவள் கையை சட்டென்ன பிடித்தான்.அவளால் அசைக்க கூட முடியவில்லை.அவளின் கண்களோடு கலக்க விட்டவன் அவளிடம்"இதுக்குதான் இந்த சண்டைக்காகத்தான் உன் முகம் இப்படி கோபத்துல்ல சிவக்குதே இதை ரசிக்க தான்."ஏன் சாரல் இப்படி உரிமையா அடிக்கிற ,என் டென்ஷன பார்த்து கவலைப்பட்ற ,நான் வருத்தப்பட்டு சாப்பிடாமல் இருந்தா சாப்பாடு ஊட்டி விட்ற இதுக்கல்லாம் என்ன பெயர்
சாரல் என் மேல் உனக்கு துளிக்கூட காதல் இல்லையா அப்பப்ப நான் உன் கண்ணுல்ல பார்க்குற அந்த துளி வெளிச்சம் எனக்கானது இல்லையா என ஆழ்ந்தக்குரலில் கேட்க்க......
அவ்வளவு தான் குமிறி அழுக வேகம்மாய் கதவை திறந்து கொண்டு பின் சீட்டில் அமர்ந்து கொண்டான்.அவளது அழுகை அவனை ஏதோ செய்ய"சாரல் சாரல் ஏன் அழுகுற என்ன பார் என்னைப்பார் என்னைப்பாருடி என அவனை வழுக்கட்டாயம்மாக பார்க்க வைக்க "அவளோ அவனது சட்டையை பிடித்து உளுக்கினாள்.
"நீ என்னை விரும்புறதை விட உன்னை நான் விரும்புறேன்.ஆனா ஏன் அப்படி என்னை பணத்தால அடிச்ச எதுக்கு என்னை மிரட்டின ஏ இப்படி பண்னே நீயும் மத்தவங்க மாதிரி காசை வச்சே எடைப்போட்டிட்டிள்ள நீயும் சாராசரி பணக்காரனா தானே நடந்துக்கிட்ட என் மனசை ஒடச்சு எனக்கு உன் மேல் இருந்து காதலை சுக்கு நூறாக்கி என்னை உன்ன வெறுக்க வச்சிட்டில்ல. போடா எனக்கு நீ வேணாம் உன்ன நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என அவன் மார்பிளையிலையே அடித்து கதறியவளை அதற்க்கு மேலும் தாளாம்மாள் இழுத்து அணைத்துக்கொண்டான்.....
இவ்வளவு காதலா என் மேல உனக்கு சாரல் பேபி என்றவனும் உணர்ச்சிகளின் பிடியில் இருந்தான்."ஆனா நான் எதுக்காக யாருக்காக பண்னேன்னு இன்னும் புருஞ்சுக்காம்ம இருக்கியே"மனதில் நினைத்தவன் அவள் முகம் முழுதும் முத்தமிட்டான்.....அவளை காற்றுக்கூட புகாத வாறு இறுக்கி அணைத்து கொள்ள அவனிடம் இருந்து விலகி அவன் முகம் பார்த்தாள்.....
எனக்கு உன் மேல கோபம் போக கொஞ்ச நாள் ஆகும் அதுக்காக என்னை விட்டுட்டு போக மாட்டில்ல என கண்களில் நீருடன் பாவம்மாய் கேட்டவளிடம் ஒரு நொடி தன் உயிர் கூடு விட்டு கூடு பாய்ந்ததை உணர்ந்தவன்"அது நான் செத்தா தான் நடக்கும்"என்றவன் அவளை மறுபடியும் காற்று புகாத வாறு இறுக்கி கொண்டவனின் இதயம் என்றுமில்லா நிம்மதியை உணர்ந்தது....