This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Tuesday 25 December 2018

Uma krishnan's அன்பென்ற மழையிலே 4

     "ஏங்க மாமா... சிபி கல்யாணத்தை பத்தி" என அவன் அம்மா ஆரம்பிக்க, 


     "இங்கபாரு ஜெயா அவன் விருப்பம் இல்லாம எதையும் செய்யாத, சாியா" என கூறினார்.


    "ஆமா இப்டியே சொல்லிட்டு இருந்தா அவனுக்கு கல்யாணம் நடந்த மாதிரி தான்..." என்றார் அம்மா ஆற்றாமையாய். 


    "நடக்கும் கண்டிப்பா... மனச போட்டு குழப்பிக்காத, போய் ரெஸ்ட் எடு. நான் ஆபீஸ்க்கு கிளம்புறேன்" என்று கூறிச்சென்றாா். 


   "இங்கன இருக்கிற ஆபிஸ்க்கு மெதுவா போனாத்தான் என்ன?" என சலித்துக் கொண்டு கிச்சனுக்கு உள்ளே சென்றார் ஜெயா. 



      சிபி MBA படித்துவிட்டு தொழில் ஆரம்பித்து விட்டான். அப்பாவிற்கு உதவியாய் தங்கள் ஆபீஸிலேயே ஒரு வருடம் வேலை செய்தான். ஆனால் அவனுக்கு அதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லை. எனவே படித்த படிப்பை பயன்படுத்த நினைத்து சுயம்மாக ஒரு தொழில் ஆரம்பித்தான். தொழில் நன்றாக போவதால் அவன் அடுத்த பிராஞ்ச்சினை அப்பா உதவி இன்றி ஆரம்பிக்க முயற்சி செய்கிறான்.


    அவன் விரும்பியபடி ஹோட்டல் கட்டவே முதலில் ஒரு வருடம் சென்றுவிட்டதால் இம்முறை பழைய பில்டிங்கை விலை பேசுகிறான். சிபியும் இளைமை உணர்ச்சிகள் ததும்பும் சராசரி இளைஞன்தான், பெண்களை சைட் அடிப்பான். ஆனால் நண்பனின் தங்கை, காதலியிடம் பிரண்ட்லியாக மட்டுமே பேசி இருக்கிறான். 


      ஆனால் அவனது நண்பன் கௌஷிக்கின் காதலி பூஜா, இவன் வசதியை பற்றி அறிந்த பிறகு காட்டிய அளவிற்கு அதிகமான நெருக்கத்தினாலும், நாகரீகமற்ற செயல்களாலும் அவளை மட்டுமல்ல ஒட்டு மொத்த பெண்கள் மீதே வெறுப்பு வந்துவிட்டது.


    இந்த பிரச்சனைக்கு பிறகு தன் நண்பனிடம் விலக ஆரம்பித்தான் (இன்னும் நம்ம ஹீரோ சீமாவ பாக்கலைல). ஏன் என்று கௌஷிக்ற்கு புரியவில்லை, எத்தனை முறை கேட்டாலும் சிபி பதில் சொல்லாததனால் அமைதியாக இருந்து விட்டான். 


          சிபிக்கு 26 வயது முடிய போவதால் ஜெயாவிற்கு கவலை கல்யாணத்தைப் பற்றி. அவனது அக்காவுக்கு மணமாகி ஒரு பெண் குழந்தை இருப்பதால் சீக்கிரம் பேரன் வேண்டுமென்ற ஆசையில் மகனது திருமணத்தை எதிா்பாா்க்கிறாா்.


                 

      சிபிக்கு தனது அக்கா மாலினி (மாலா) மீதும் மருமகள் சைலு (சைலஜா ஶ்ரீ) மீதும் அதிக பாசம் உண்டு. மாமா கரண்குமாா் அவனை விட 4 வயது மூத்தவர் ஆதலால் மரியாதை மட்டுமே. அக்கா அவனை விட ஒரு வயது தான் மூத்தவள். எனவே பெயா் சொல்லிதான் அழைப்பான். மாமா கரண் அதை ஒன்றும் சொல்வதில்லை. 


    சைலுக்கு மாமா என்றால் உயிா். சனி ஞாயிறு விடுமுறைக்கு எல்லாம் அவனைத்தேடி ஓடி வந்து விடுவாள். அக்காவை உள்ளூாிலேயே கொடுத்துள்ளனா். கரணுக்கு சொந்த தொழில் சூப்பா் மாா்க்கெட் என்பதால், அவனது அப்பா கூட உதவியாக இருப்பதால் எந்த பிரச்சனையும் இல்லை. ஹோட்டல் சென்ற சிபி புதிய ஆா்டா்கள் ,அட்வான்ஸ் ,ரூம் புக்கிங், வெகேட்டிங் ரெஸ்டாரெண்ட் உணவு அனைத்தையும் செக் செய்து கையெழுத்து இட மதியம் ஆகிவிட்டது. சாப்பிட சென்றான்....


      அலுவலகம் முடிந்து சீமா அவளது தோழியுடன் பைக்கில் கிளம்பினாள் .மகா அவளிடம், "உன் பைக் கொண்டு வரலாம்ல டீ? ஜாலியா இருக்கும்... இந்த ஓட்ட பைக்ல ஏன் டீ வர்ற நீ?"  என கேட்டாள்.


   "ஏன் டி இதுக்கென்ன கொறச்சல்? Tvs XL தான் பெஸ்ட் எப்போமே..." என்றாள் சீமா.


    "சீ போடி" என கூறிவிட்டு ஐஸ்கிரீம் பாா்லா் சென்றாள் மகா. அரட்டை முடித்து 2 பேரும் திரும்ப வீடு செல்ல 6.30 மணி ஆயிற்று. 


     மகா சீமா அம்மா தேவியிடம் ஒரு ஸ்பெஷல் டாடா கூறிவிட்டு கிளம்பி விட்டாள். உள்ளே சென்று உடை மாற்றிய சீமாஹாலில் டீவி பாா்க்க அமா்ந்தாள். 


    "எத்தன தடவை சொல்றது டீ ? இந்த பாவாடைய போடாதன்னு..."


    "அம்மா இதுக்கு பேரு மிடி (ஸ்க்ர்ட்) மா."


   " என்ன எழவோ போய் நைட்டி மாத்து டி".


    "பிள்ள வந்ததும் ஆரம்பிச்சிட்டியா?" என்றார் மணி.


    "நீங்க தா அவள கெடுக்குறீங்க" என்றார் தேவி.


    "இங்க இருக்கற வரை இஷ்டம் போல இருக்கட்டும்டி" என்றார் மணி.


    "போற வீட்லயும் இதத்தான் போட போறா, நமக்கு வசவு வாங்கி குடுக்கன்னேவும்..." என்று அடுப்படிக்கு நகா்ந்தார் . 


    "மாடர்ன் டிரஸ் போட அலவ் பண்றவன தான் நா கட்டிப்பேன்" என சீமா சொல்ல உன்னை உள்ளூா்ல தான கட்டி குடுப்பேன் என்றாா் தேவி.


     "அப்பா...." என சீமா ஆரம்பிக்க "ஆமாம் மா..." என்றாா் மணி.


    கோபித்துக் கொண்டு அறைக்கு சென்றவளை சாப்பிட அழைக்க சென்ற தேவி சீமாவிடம், "எங்களுக்குன்னு இருக்குறது நீ ஒருத்தி தானம்மா. உன்னய கண்காணாத தூரத்துல விட்டுட்டு, நாங்க எப்டி தனியா இருக்குறது சொல்லு? வாம்மா சாப்பிட..." என்றாா்.


    அமைதியாக சாப்பிட்டு வந்து படுத்த அவள் யோசித்த படியே தூங்கி விட்டாள் ஒரு முடிவோடு.


    (சீமா --  நவநாகரீக யுவதி ஆனால் அன்பானவள் அழகானவள் பண்பான பொண்ணு கொஞ்சம் கோவக்காாி நிறைய ரோசக்காாி.அவ போட்டுறுக்க குட்டி பிள்ளையாா் செயின் தான் அவள் பேவரைட். ஜீன்ஸ் அதவிட பேவரைட். எக்ஸ்ட்ராவா கராத்தேயும் தெரியும் ஸ்கூல் டேஸ்ல இருந்தே... நீ பாவம்டா சிபிகண்ணா...)


Anubama karthik's தோல்வி நிலையென நினைத்தால் 14



இடம் மாறிய இதயங்கள்

இணைகின்ற நேரத்திலே

விடை காண துடிக்குத்தே

விடையில்லா கேள்விக்கு

விடையாக  வந்தவளே

விலகாதே என்னவளே

நீ விலக நினைத்தாலே

என்னுயிர் நீங்கும் என்னவளே


 

நிர்மலமான இரவு, இரு அறிமுகமில்லா இருவர் தனிமையில் சந்திக்கும் வேளை, இயற்கையின் ரசவாதத்தால் இருயிர்  ஒருயிர் ஆகும் தருணம், தோழியர் புடை சூழ மங்கை நல்லாள் இல்லறமாம் நல்லறம் கற்க முதலடி எடுத்து வைக்க துவங்கினாள்.


குழப்பம் மேவிய முகங்களுடன் அமர்ந்திருந்த தம்பதிகள் இருவரும், ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேச தயங்கினர்.


மெல்ல பேசத் துவங்கிய பாஸ்கர் தன் மனைவியின் குழப்பம் கல்விக்கானது என்று அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டான். பின்னர் தன் மனைவிக்கு படிக்க எந்தவிதமான தடையும் இல்லை என உணர்த்தினான்.


கல்விக்கான தடை நீங்கியதில் மகிழ்ச்சி கொண்ட ப்ரபாவோ, தான் குடும்பத்தை கவனித்து கொள்வதாயும், தேவை ஏற்படின் தொழிலுக்கும் உதவ முடியும் எனக்கூற தான் கேட்காமலே தன் தேவையை நிறைவேற்ற முனைந்த மனைவியிடம் பாசம் பெருகியது பாஸ்கருக்கு, அங்கே ஒரு இல்லறம் நல்லறமானது.


ப்ரபாவின் ஆலோசனையின் பேரில் அந்த ஊரில் ஒரு பள்ளியும் நூலகமும் ஆரம்பிக்க ஏற்பாடு செய்தார் பாஸ்கர், அந்த நூலகத்துக்கு நூலகராக பகுதி நேர வேலைக்கு  வந்தவர்தான் ஷேஷகிரி.


எழ்மையான குடும்பத்தில் பிறந்தவராகையால் தனது தாய் கஷ்டப்பட்டு மெஸ் நடத்தி தன்னையும் தனது தம்பி தங்கையையும் படித்து ஆளாக்கி வருவதை உணர்ந்தே இருந்தார்.


இன்னமும் சில வருடங்களில் தன் தங்கைக்கு திருமணம் செய்ய வேண்டிய கடமை இருப்பதால் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து பணம் சேர்த்தார்.


வேலைக்கு வந்த இடத்தில் விவசாய பூமி ஆகையால் இங்கு குறைந்த விலையில் கிடைத்த தரமான பொருட்களை நகரத்தில் இருக்கும் வியாபாரிகளுக்கு கமிஷன் அடிப்படையில் வாங்கி விற்க துவங்கினார், அவ்வகையில் பாஸ்கரின் வீட்டுக்கும் வந்து போக நேர்ந்தது.


நூலகத்தில் இருக்கும் நல்ல புத்தகங்களை பெண்கள் இருவருக்கும் அறிமுகப்படுத்தினார். தொழிலில் அவரின் நாணயம் பிடித்து போகவே அவரின் மூலமாகவே பாஸ்கரின் பரிவர்த்தனைகள் நடந்தன, இந்நிலையில் ப்ரபா கருவுற்றாள்.


மாதாந்திர பரிசோதனைக்கு ப்ரபாவுக்கு துணையாக லக்ஷ்மியும் பாஸ்கரும் போய் இருந்தனர்.


அங்கு வந்த நர்ஸ் ஒருவர் இறக்கும் தருவாயில் உள்ளஒரு நோயாளி அவர்களை பார்க்க விரும்புவதாக தெரிவிக்க பார்க்க சென்ற பாஸ்கர் ப்ரபாவுக்கோ அதிர்ச்சி தாங்க முடியாது மயங்கி விழுந்தாள். காரணம் அங்கு படுக்கையில்  நோயாளியாக கண்டது அவளின் அக்கா சாரதாவை அல்லவா?


சாரதாவின் வாழ்வில் என்ன நடந்தது? அவள் இப்படியாக காரணம் என்ன? அவள் காதலன் என்ன ஆனான் ?  அவளின் பெற்றோரை சாரதா சந்தித்தாளா? 


விடைகள் அடுத்த அத்தியாயத்தில்

Pista icecream

VICKEY'S RECIPES :)


2 மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி இந்த ஐஸ் கிரீம் நீங்க 5 நிமிஷத்துல ரெடி பண்ணிடலாம் . இத செய்யுறதுக்கு கொஞ்ச பொருள் தான் தேவை. எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணிட்டு 6 முதல் 8 மணி நேரம் பிரிட்ஜ்ல வச்சிருந்த போதும் டேஸ்டியான ஐஸ் கிரீம் ரெடி. நான் இதுல கலர் ஏதும் add பண்ணல natural color தான் . கடைல வாங்குற மாதிரி பச்சை கலர்ல இந்த ஐஸ்கிரீம் இருக்காது பட் டேஸ்ட் கடை டேஸ்ட்ல கண்டிப்பா இருக்கும்.

தேவையான பொருட்கள்

whipping cream or fresh cream - 2 cup
பிஸ்தா எசென்ஸ் - 2 டீஸ்பூன்
வறுத்த பிஸ்தா பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
milkmaid - 1 cup

செய்முறை


  • ஒரு மிக்ஸிங் பௌலில் whipping cream or fresh cream , பிஸ்தா எசென்ஸ் சேர்த்து ஒரு 2 நிமிடம் beater வச்சு நன்றாக அடிக்கவும்.

  • அடுத்து milkmaid சேர்த்து ஒரு 2 நிமிடம் அடிக்கவும்.


  • கடைசியாக வறுத்த பிஸ்தா பருப்பை மிக்ஸியில் பொடித்து இந்த கலவையில் சேர்த்து ஒரு 1 நிமிடம் அடிக்கவும்.





  • ஒரு tight container box எடுத்து அதில் இந்த கலவை ஊற்றி பிரிட்ஜ்ல் 6 முதல் 8 மணிநேரம் வைக்கவும்.

சுவையான ஐஸ்கிரீம் தயார் . ஒரு பௌலில் ஐஸ்கிரீம் வைத்து அதில் மேல் அவரவர் விருப்பமான toppings சேர்த்து சாப்பிடுங்கோ . எனக்கு whipped cream , hot fudge toppings போட்டு சாப்பிட பிடிக்கும் உங்க எல்லாருக்கும் எப்படி :)




எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.