This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Sunday 10 February 2019

உமாசாரல்'s சாரலடி நீ எனக்கு 2


Click here to get all parts

"விஜய் அப்படி சொண்ணதும் கணேஷ் சில நொடி அதிர எதையாவது உளராதே என்று மெல்லியக்குரலில் கண்டிப்புடன் சொல்ல விஜய்யோ...


"நான் விளையாடலப்பா எனக்கு அந்தப்பொண்னைப்பிடிச்சிருக்கு என மறுபடியும் சொல்ல கணேஷ் இன்னும் டென்ஷன் ஆக அப்பொழுது மிதுலா அங்கு வர கணேஷ் முகத்தை பார்க்க டென்ஷனாக இருப்பது தெரிந்தது அவருக்கு...



"என்னாச்சுங்க...ஏன் இப்படி இருக்கீங்க...



"அதை உன் பய்யன்ட்டயே கேளு எனவும்...


"என்ன விஜய்" அவன் சொல்ல இப்பொழுது மிதுலாவிற்க்கே கோபம் வர வில்லையென்றாலும் சங்கட்டம் வந்தது...


"எதையாவது செய்யவேனும்மே அதனால் விஜய் நீ வெளிய கார்ல வெயிட் பண்ணு எனவும்....


"அம்மா எனக்கு அந்தப்பொண்னை என்ற போது "சரி விஜய் இதைப்பத்தி அப்பறம் பேசலாம் என சொல்ல விஜய் வெளியே வந்தான்...



"காரில் வந்து கண்னை மூடி இப்போ என்ன சொல்லிடேன்னு இவ்ளோ கோபப்பட்றார் அப்பா என யோசனையில் இருந்தவனை களைத்தது சாரலின் குரல்...



"ஹலோ என்ற குரல் கேட்க்க கண்னைத் திறந்துப்பார்த்தான் சத்தியம்மாய் சாரலை அவன் எதிர்பார்க்கவில்லை.ஒரு வேலை கண்னை திறந்துகொண்டு கனவு காணுகிறேன்னா என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ள ..



"இப்பொழுது சாரல் கோபத்துடன் கேள்வி கேட்டாள்.இது உங்க காரா எனவும் தான் அவள் மயக்கத்தில் இருந்து வெளியில் வந்தான்.ஒரு நொடி அவளை ரசித்து கண்களில் படமெடுத்துக்கொண்டவன்...




"என்னது என்ன கேட்டிங்க எனவும் சாரலுக்கு புசு புசு வென கோபம் தலைக்கு ஏறியது."கடுப்புடன் அவனை ஏறிட்டவள் இது உங்க காரான்னு கேட்டேன் எனவும் அவளது கோபத்தை ரசித்தவன் அவளிடம்....



"

ஆமா அதில் உங்களுக்கு ஏதும் பிரச்சனையா என புன்னைகையுடன் கேட்க்க சாரலுக்கு இன்னும் கோபம் தலைக்கு ஏற....



"மத்தவங்களுக்கு பிரச்சனை என சிடுசிடுத்து அந்த சிடுசிடுப்பில் அவள் இன்னும் அவனை வசிகரித்தாள்.அட என்னம்மா கோபம் வருது என நினைத்தவன் அவளை சீண்டி பார்த்து ரசிக்கும் எண்ணத்தில...




"அப்படி யாரும் என்னிட்ட சொல்லயே எனவும் சாரலுக்கு இன்னும் கோபத்தில் உதடுத்துடித்தது. அதைப்பார்த்த விஜய் இப்போ து அவளிடம் மொத்தம்மாய் விழுந்து தான் போனான்....


"எத்தனையோ பெண்களைப் பார்த்துருக்கிறான்.இங்கும் சரி வெளிநாட்டிலும் சரி அரைகுறை ஆடைகளுடன் தன்னுடன் படிக்கும் பெண்கள் அவனுடன் உரசி பேச முயலும் போதும்கூட எல்லாருடனும் நன்கு பேசுவானே தவிர யார் மீதும் இப்படி பித்துப்பிடித்தது போன்ற உணர்வ்வை அவன் அறிந்தது இல்லை. ஆனால் சாரலைப்பார்த்தும் அது பீறிட்டுக்கொண்டு வர உடனே அதை தன் அப்பாவிடம் சொல்லிவிட்டான்.. 


"பெண்கள் மீது மையல் உண்டு 

நான் பித்தன் கொண்டது 

உன்னில் மட்டும்......


"நீ ஒத்தைப்பார்வ்வை பார்க்கும் போது என் முதுகுத்தண்டில் மின்னல் வெட்டும்""



"சாரலைப்பார்க்கும் போது அந்த பாடலின் வரிகளில் உள்ளது போல் அப்படியே இருந்தது..



"ஆதான் நான் சொல்றேன்னே என அவள் சொல்ல விஜய்யோ அவளது கோபத்தில் அசாராது...



"சரி சொல்லுங்க என்றான் தனது வென்பற்கள் தெரியும்படி ஒரு வசிகர சிரிப்பை சிந்திய படி...



"இவன் என்ன லூசா நான் இவனை திட்டிட்டு இருக்கேன் இவன் என்னனா சிரிச்சிட்டு இருக்கான் என நினைத்தவள் "கார்ல்ல போனா எதிரப்போறவுங்க உங்கக்கண்ணுக்கு தெரியமாட்டாங்களா கோபம் சிவக்க கேட்க்க விஜய்யோ...




"ஏன் தெரிவாங்களே...கண்ணாடி வழியா என்றான் குறும்புடன்...




"அதைக்கேட்ட சாரல் இவனிட்டல்லாம் என்ன பேச என நினைத்தவள் "இனி காரை ஓட்டும் போது பார்த்து ஓட்டுங்க என சொல்ல அவனோ...



"இது வரை நான் சரியாதான் கார் ஓட்டிறுக்கேன் என்னையும் மீறி எதாவது தப்பு நடந்துருந்தாள் நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் என அவன் சொண்ண போது தான் சாரலுக்கு மனதில் சிறு குற்ற உணர்வ்வு...



"அவன் சொண்ணது சரி தான் இவன் சரியா தான் வண்டி ஓட்டி வந்தான் தப்பு அந்தப்பசங்க மீது தான் நான் அவசரப்பட்டு சிடு சிடுன்னு விழுந்துட்டேன்னோ என நினைத்தவள்"முகத்தை சுறுக்கி அவன் முகத்தை பார்த்துவிட்டு எதுவும் கூறாமல் சென்று விட்டாள்...




"விஜய்யோ டேய் அவள் உன்ன திட்டியாது கொஞ்ச நேரம் நின்னுருப்பா மன்னிப்பு கேட்டு அவளை இப்படி விரட்டி விட்டிட்டியேடா லூசு பயலே என்று தன்னயே திட்டும் வேளையில் மிதுலாவும் கணேஷூம் வந்து விட்டுறுந்தனர்.பிறகு கார் வீட்டை நோக்கி பயணித்தது...




"வீட்டிற்க்கு வந்ததும் விஜய் கணேஷிடம் அப்பா எனக்கு அந்தப்பெண்ணத்தான் பிடிச்சிருக்கு என சொல்ல கணேஷ் மிதுலா என கத்த......




"அவன் சின்னப்பய்யன் ஏதோ தெரியாம்ம பேசுறான் நீங்க ரூம்க்கு போங்க எனவும் கணேஷ் தனது அறைக்கு சென்றார்...




"மகனிடம் வந்தவர் என்ன விஜய் இது சின்னப்பிள்ளையாட்டம் நீ பேசுறதும் நடந்துக்குறதும் சரியில்லை என சொல்ல...




"என்னம்மா நான் சரியில்லாம்ம நடந்துட்டேன்.எனக்கு அந்தப்பொண்ண பிடுச்சுருக்கு சொண்னேன் இது தப்பா இதுக்கு ஏன் அப்பா இவ்வளவு கோபபட்றாரு....



"

அப்பறம் கோபப்படாம என்ன செய்வார் விஜய் ஒருப்பொண்ணைப்பார்த்ததும் நான் அவளைத்தான் கல்யாணம் செய்துப்பேன்னு சொண்ணா அவருக்கு கோபம் வரத்தானே செய்யும்...


"நமக்குன்னு ஒரு அந்தஷ்து கெளரவம் இருக்கு விஜய் அதுக்குதக்கன தான் நாம நடந்துக்கனும் விஜய்.அப்பத்தான் ஊர் நம்மளை மதிக்கும் என மிதுலா விஜய்க்கு விளக்க.....




"அதைப்பத்தி எல்லாம் 

யோசிக்கறவன்னா நம்ம விஜய்."உங்க கவுரவத்தை எதாவது கோவில் உண்டியல்லயோ இல்ல குப்ப தொட்டியிலயோ போய் போடுங்க.பிடிச்சதை கூட செய்ய விடாம்ம செய்யிற கவுரவம் எனக்கு தேவையே இல்ல. அதல்லாம்ம எனக்கு எதைப்பத்தியும் கவலை இல்ல.அதான் எனக்கு கல்யாணம் பண்றதா முடிவுப்பண்ணிட்டிங்களாம்மே அப்படி செய்யுறதா இருந்தா அவளையே பாருங்க நீங்கப்பார்த்தாலும் பார்க்கலையின்னாலும் அவள் தான் என் ஒய்ப் ..நீங்க கல்யாணம் பண்ணி வச்சாலும் ஓகே.என்னய பண்ணிக்கச்சொண்ணாலும் ஓகே என்றான் அசால்ட்டாக தோளைக்குளுக்கி...



"அதிர்ந்துப்போனார் மிதுலா விஜய்யிடம் இப்படி தீவிரம்மான பேச்சைக் அவர் இதுவரை கேட்டதில்லை.இப்போதைக்கு எதையாவது சொல்லி இவனை சமாளிக்கனும் என்று எண்ணியர்.சரி நீ கொஞ்சம் அமைதியா இரு அந்தப்பொண்ணைப்பத்தி விசாரிக்கச் சொல்றேன் அது வரைக்கும் நீ அமைதியா இரு சரியா கொஞ்சம் டைம் கொடு....



"கொஞ்சம் என்ன நிறைய எடுத்துக்கங்க ஆனா எனக்கு சாதகம்மா பதில் வரனும் என்றவன் தனது அறைக்கு போய் பொத்தன்ன கட்டிலில் விழுந்தான்....




"சாரல் நினைவு வந்து இம்சைக்கொடுக்க அந்த கூந்தல் மனம் கொண்ட பெண்ணின் மனமும் வந்து ஆட்டிப்படைத்தது.அவளோட பேரு என்னவ்வா இருக்கும் அதை தெரிஞ்சுக்காம வந்துட்டம்மே என்னபேரா இருக்கும் அவளப்போலவ்வே அவ பெயரும் அழகா தான் இருக்கும் என நினைத்துக்கொண்டான்....


விஜய் மறு நாள் காலையில் புறப்பட்டான்...


எங்க கிளம்பிட்ட என கணேஷ் கேட்க்க....



"கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்...



"வந்ததுல்ல இருந்து வெளியே தான் சுத்திட்டு இருக்க வீட்டில்ல இருந்து ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே எனவும் விஜய்யோ...




"நான் என்ன வயசானவனா வீட்டில் இருந்து ரெஸ்ட் எடுக்க ஒரு சின்ன வேளை போயிட்டு வந்துட்றேன்....



"அப்படியென்ன வேலை அப்படி வேளைப்பார்க்கனும்னா ஆபீஸ் வா எம்டி சீட்டில் உட்காரு வேலையைப்பார் நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பேன்...



"என்ன ரெஸ்ட் எடுடா சொல்லிட்டு இப்ப நீங்க ரெஸ்ட் எடுக்குறதா சொல்றீங்க...என...


"நான் எவ்ளோ வேலையைத்தாண்டா பார்ப்பேன் நானும் ரிலாக்ஸ் பண்ண வேண்டாம்மா நானும் எவ்ளோ நாள் தான் ஓடிட்டே இருப்பேன்.உனக்கும் சேர்த்து அந்த சதிஷ் பய்யன் தாண்டா வேலைப்பார்க்குறான் என கணேஷ் சொல்ல...




"சரி நீங்களும் ரெஸ்ட் எடுங்க நான் வேணாம் சதிஷ்ட்ட. சொல்றேன் அப்பா வேளையும் நீயே செய்யிடானு நான் சொண்ணா கேட்டுப்பான் என சொண்ணதும் மிதுலா பக்கென்ன வந்தச்சிரிப்பை அடக்கி கொண்டார்....




"

டேய் என்னடாப்பேசுற....என கணேஷ் கத்த...



"

இப்போ என்ன நான் ஆபீஸ் வரனும் அதானே நானே ஒரு நாள் வந்து ஜாயின் பண்ணிப்பேன் அது வரைக்கும் என்னைத் தொந்தரவு பணணாதிங்க என்று கிளம்பி விட்டான்.....



"

மிதுலா உனக்கு என்னடி ஆச்சு என கணேஷ் அவரிடம் கேட்க்க...




"

எனக்கு ஏதும் ஆகலைங்க ...



"

அப்பறம் ஏண்டி அவன் அப்படி பேசிட்டு போறான் நீ அமைதியா நிக்குற....



சின்னப்பய்யன் தானுங்க சீக்கிரம் புரிஞ்சுப்பான்...என மிதுலா கூற...



"

யார் சின்னப்பய்யன் உன் பய்யனா ஹாஸ்பெட்டலில் ஒரு பொண்ணைப்பார்த்தேன் எனக்கு அவளைக்கல்யாணம் பண்ணி வைங்க என சொல்றான் அவனா சின்னப்பய்யன் பாரினில் இருந்து வந்ததும் ஆபீஸ் பொறுப்பைக் கையில் எடுப்பான்னு நினைச்சா என்ன கொஞ்ச நாள் ப்ரியா விடுங்கன்னு சொல்லிட்டுப்போறான்....



"

இந்த வயதான காலத்தில் எவ்வளவு வேளையைப்பார்ப்பேன் என சலிக்க...மிதுலாவ்வோ...



"

அப்படியென்ன உங்களுக்கு வயசாயிடுச்சு ஐம்பதல்லாம் ஒரு வயதா என மிதுலா கணேஷைப்பார்த்து காதலுடன் சொல்ல கணேஷிம் அவரைக் காதல் பார்வ்வைப்பார்க்க இருவரும் புன்னகையித்துக்கொண்டனர்...



"

புரிதல் ஒன்றே எவ்வயதிலும் காதலை உருவாக்கும் அது கணேஷ்-மிதுலா தம்பதியருக்கு நிறைய இருந்தது....



"

காரில் சென்றுக்கொண்டுருந்த விஜய்க்கு தவம் இல்லாமல் கிடைத்த வரம் போல் அவன் கண்களுக்கு சாரல் தெரிந்தாள்.ஹாஸ்பெட்டலுக்கு போக பஸ்ஸிற்க்காக பஸ்டாண்டில் வெயிட் பண்ணிக்கொண்டுருந்தாள்....



"

அவளை பார்க்கும் பொழுது அந்த கூந்தல் மணம் கொண்ட பெண்ணும் நினைவு வர அவனுக்கு பெரும் ஆச்சர்யம் இவளைப்பார்க்கும் பொழுது அந்த இனிதான மனமும் தாக்குகிறதே என நினைத்தவன் காரை ஓரம்மாய் நிறுத்தி அவளை தொலைவில் இருந்து கவனித்துக்கொண்டுருந்தான்....



"

அமையாய் கையைக்கட்டி நின்றுக்கொண்டுருந்தாள்.சந்தனநிறத்தில் அழகான பூ போட்ட எம்ராயிட்றி சுடிதார் போட்டுருந்தாள்.அது அவளுக்கு எடுப்பாய் இருந்தது.இடைவரை இருந்த அவளது பின்னல் இன்னும் அவளது பின்னழகை எடுப்பாய் காட்டியது.....


"ஆளை மயக்குறா என நினைத்தவன் அவளிடம் பேச நினைத்தான்.ஆனால் உன்னைப்பார்த்தாள் திட்டுவாளே என நினைத்தவன் பிறகு உன்ன திட்ட அவளுக்கு இல்லாத உரிமையாடா என நினைத்தவன் காரை எடுத்து அவள் அருகே நிப்பாட்டியவன்....



"

கார் அருகே வரவும் தள்ளி நின்று கொண்டு நிமிர்ந்து பார்க்க புன்னகை முகத்துடன் ஹாய் என்றான் அவளைப்பார்த்து...



"

இவனா என நினைத்தவள் முகத்தை திருப்பிக்கொண்டாள்....விஜய்யோ ''ஹலோ உங்களத்தான்" எனவும்



"

அவனை பார்த்து முறைத்தவள் ஹலோ யார் நீங்க எனனை ஏன் கூப்பிடறீங்க....எனவும்...



"

என்னைத் தெரியல நேத்துக்கூட ஹாஸ்பெட்டலில் பார்த்தோம்மே என்னக்கூட திட்டினீங்களே என்று சிரித்தான்...



"திட்டு வாங்குனதை சிருச்சுட்டே சொல்றான் என நினைத்தவள் எனக்கு ஞாபகம் இல்லை நீங்க முதலில் கிளம்புங்க காலையிலையே கடுப்பைக்கிளப்புறான் என நினைத்தாள்...



"

ஓகே டென்ஷன் ஆக வேண்டாம் நான் கெளம்புறேன் அதற்க்கு பேவரா உங்க பெயர் தெரியனும்மே....



"

அதற்க்கு அவளோ "ஏன் என் பெயரில் ட்ரஸ்ட் ஆரம்பிக்க போறீங்களா என நக்கலாய் கேட்க்க....

"

நீங்க ஆசைப்பட்டா அதையும் நான் செய்ய தயார் என்றான் புன்னகையுடன்...


"ஐயோ எங்க இருந்து வந்தானு தெரியலையே இந்த கிறுக்கன் காலையிலயே இம்சை பண்றானே என தலையில் கை வைக்க பிறகு அவனிடம்."யார் நீங்க உங்ககிட்ட ஏன் நான் என் பேரைச்சொல்லனும் தயவு செய்து இங்க இருந்து கிளம்புங்க...



"

உங்க பெயர் தெரியாமல் நான் இங்க இருந்து போகமாட்டேன்...



"

இருங்க எனக்கென்ன நீங்க எவ்ளோ நேரம் இருந்தாலும் என் பெயர் உங்களுக்கு தெரியப்போவது இல்லை..



அதையும் பார்ப்போம் நான் நினைத்தது எதுவும் நடக்காமல் இருந்ததில்லை என்றான் ஒரு வித கம்பீரத்துடன்...



"

இன்னைக்ககு அப்படி ஏதும் நடக்காது ஏமாந்து தான் போவீங்க என்று சொண்ணவள் ஓரம்மாய் நின்று கொண்டாள்....




"

அப்பொழுது தான் ராமமூர்த்தி அங்கு வந்தார்..சாரலின் அப்பா..


"

என்னம்மா சாரல் பஸ் இன்னும் வரலையா..என்றபடி..



"ஐயோ இப்படி கவுத்திட்டிங்களே அப்பா நினைத்தவள் அவனை ஓரக்கண்ணால் பார்க்க அவனோ...



"

அவன் புருவத்தை உயர்த்தி எப்படி என்றான்."இவளுக்கு பொருத்தமான பெயர்..இந்த இரண்டு நாட்களாய் அவளை நினைக்கும் இதமான சாரலில் நினைவது போன்று தான் உணர்வான்.இப்பொழுது பெயரும் அது போலவ்வே இருக்கும் என நினைக்கவில்லை...


என்னாச்சு சாரல் பஸ் வரலையா என கேட்க்க....



"

ஆமாபா இன்னும் வரலை அனேகம்மா வந்துட்டு இருக்கும் என நினைக்கிறேன்..



"

சரிம்மா பஸ் வரும் வரை நிக்குறேன் ...



"

வேணாப்பா தூசி உங்களுக்கு ஆகாது இழப்பு வந்துடும் நீங்க வீட்டுக்கு கிளம்புங்க...



"

இல்லம்மா சாரல் ....



"ஐயோ நீங்க கிளம்புங்க அப்பா எனவும் கிளம்பிவிட்டார்....



"

அதை பார்த்த விஜய் அப்பா மேல பயங்கர பாசம் போல நினைத்துக்கொண்டவன் அவள் பஸ் ஏறி போனப்பிறகே கிளம்பினான்....


அதே சந்தோஷத்துடன் சதிஷிற்க்கு போன் செய்தான் என்னடா மச்சான் என்ன பண்ற...



"வேலை

யில்ல தான் இருக்கேன் நீதான் ஆபீஸ் பக்கம் வரவ்வே மாட்டிஙகுற உன் அப்பா என்ன நம்பி இதை யெல்லாம் ஒப்படைச்சுறுக்கார் நான் அதைக்கட்டி காக்க வேண்டாம்மா என சதிஷ் ராகம் பாட..




"

உன்னுடைய கடமை உணர்ச்சிக்கு அளவ்வே இல்லாம போச்சு நீ உடனே கிளம்பி நம்ம ஹோட்டலுக்கு வா....



"

இல்லடா எனக்கு நிறைய வேல இருக்கு முக்கியம்மான டீல் போயிட்டுருக்கு என சதிஷ் சொல்ல...


"அந்த வேலையை நாளைக்கு பார்க்கலாம் நான் அப்பாவிடம் பேசிக்கிறேன் நீ உடனே வந்தே ஆகனும்...



"

சரி வரேன் என சதிஷ் சொல்ல நன்பேண்டா என்று சொல்லிவிட்டு அணைப்பை துண்டித்தான்....


"சதிஷ் கணேஷின் கண்ஸ்ஷக்சன் கம்பெனியில் தான் வேல பார்க்குறான் எம்டி என்று மட்டும் தான் சொல்லவில்லை மத்தபடி அதன் மொத்தப்பொறுப்பையும் சதிஷ் தான் நிற்வகிக்கிறான்.அவனது உண்மையான உழைப்பில் கணேஷிற்க்கு அவன் மீது வானளவு மதிப்பு உண்டு விஜய்க்கு நிகராகவ்வே அவனையும் பார்ப்பர் மிதுலா-கணேஷ் தம்பதியினர்.




"

விஜய் நான்கு வருடம் கழித்து ஹோட்டல் வர ஊழியர்கள் அனைவரும் மிக மரியாதையுடன் வணக்கமும் நலம் விசாரிப்பும் செய்தனர்..அதற்கு பொறுமையாகவும் புன்னகையுடன் பதில் சொண்ணவன் தனது பிரத்யோக அறைக்குள் வந்து அமர்ந்தான்...




"

ஹோட்டல் மிகப்பெரிது தான் அனால் அதையும் தாண்டியது ஊழியர்களின் புன்னகை முகம் என நினைத்துக்கொண்டான்.




"

சதிஷ் அப்பொழுது தான் வந்தான் விஜய்யிடம் என்னடா எதுக்கு வரச்சொண்ண சொல்லு நான் கிளம்பனும் என பற 




"ஏன்டா வந்ததும் பறக்குற என விஜய் கேட்க்க..



"சரி சொல்லு என்றவன் விஜய்யின் முகத்தைக் கவனிக்க அவன் புன்னகை மன்னனாய் இருப்பதைக்கவனிக்க...என்னடா ரொம்ப ஹேப்பியா இருக்க...


இந்த புன்னகைக்கு பொருள் என்னவ்வோ என சதிஷ் கேட்க்க 



"அதே மந்தகாச புன்னகையுடன் பதில்சொண்ணான் விஜய்... 


சாரல்....என்று.......

No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.