This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License. Readers dont try to copy the content here.

Sunday, 2 December 2018

3 in 1 recipe

VICEKY'S RECIPES :)


3 in 1 ரெசிபியா . அப்டினா நீங்க இந்த ஒரு ரெசிபி செஞ்சாலே விதவிதமா 3 ரெசிபி செஞ்சு அசத்திடலாம் .எப்படி ஒரு கல்லுல 3 மாங்காய் சொல்லுவாங்களே அந்த மாதிரி . இந்த உருளைக்கிழங்கு ஸ்டப்பிங் செஞ்சு வச்சுக்கிட்டா நீங்க 3 ரெசிபிஸ் குக் பண்ணிடலாம். bachelors , பேமிலி , கிட்ஸ் எல்லாருக்கும்  வெரைட்டியா சாப்பிட்ட மாதிரி இருக்கும் . உங்க வீட்ல கிட்ஸ் பார்ட்டி வச்சாலும் இந்த டிஷ் செய்யலாம். என்னனா ரெசிபீஸ்னு பார்க்க ரெடியா ??




Basic potato masala recipe

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் - 1 
பச்சை மிளகாய்  - 1 ( பொடியாக நறுக்கியது )
கேரட்  - 1 (பொடியாக நறுக்கியது )
பீன்ஸ்  - 10 (பொடியாக நறுக்கியது )
உருளைக்கிழங்கு  - 3 வேகவைத்தது 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 / 4 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள்ஸ்பூன் 
கொத்தமல்லித்தழை 
உப்பு , எண்ணெய் தேவையான அளவு 

செய்முறை 

  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

  • சிறிது நேரம் வதக்கிய பின்பு கேரட் , பீன்ஸ் , மசாலா தூள்கள் சேர்த்து ஒரு 2 நிமிடம் வதக்கவும் . பிறகு 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி போடு அவற்றை வேக வைகுங்கள்.

  • தண்ணீர் எல்லாம் வற்றி வெந்த பின்பு வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்க்கவும் . அடுத்து தக்காளி சாஸ் , உப்பு சேர்த்து கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.

So basic potato masala ready. இத வச்சு எப்படி அந்த 3 ரெசிபிஸ் பண்றதுனு பாக்கலாம் வாங்க.






No comments:

Post a Comment

எழுத்தாளர்கள் கவனத்திற்கு

இந்த தளத்தினில் உங்களது படைப்புகளையும் இடம்பெறச் செய்ய விரும்பினால், rheamoorthy6@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.